பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3虏要 நினைவுக் குமிழிகள்-4 () 1965-66 என நினைக்கின்றேன். சித்துரர் அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் தமிழ் சிறப்புப் பாடம் நடைபெறுவதற்கு அங்கீகாரம் வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தனர். கல்லூரியில் இதற்கு வசதிகள் உள்ளனவா என்று பார்ப்பதற்கு ஒராள்-ஆணையம் அனுப்பி அந்த ஆணையத்தின் அறிக்கைப்படி எல்லா வசதி களும் (ஆசிரியர், இட வசதி, நூலக வசதி) உள்ளனவா என்பதை ஆய்ந்து அனுமதி வழங்குவர். பல்கலைக் கழகத் தில் தமிழ்ப்புலம் (Facility) ஒன்று இல்லாததாலும், துறை யிலும் துணைப் பேராசிரியரோ, பேராசிரியரோ இல்லாத தாலும், துறை பற்றிய வினாத் தொகுதி (Questionnaire) அனுப்பி அதற்கு முதல்வர் அனுப்பி வைக்கும் விடையை ஆய்ந்து அனுமதி வழங்கலாம் என்ற குறிப்பை வைத்தார் பதிவாளர் துணைவேந்தர் பார்வைக்கு. துணைவேந்தர் அந்தப் பரிந்துரைக் குறிப்பின் மீது பேராசிரியருக்குத் தகுதியுள்ள ஒருவர் விரிவுரையாளராக இருந்தாலும் அவரை ஒர் ஆணையமாக அனுப்பலாம் என்ற கட்டளை யைப் பிறப்பித்தார். சித்துர் அரசினர் கல்லுரரியில் திரு. பொன். செளரிராஜன் என்ற ஒரே ஒரு தமிழ் விரிவுரையாளர். அவர் தம்முடைய சொந்த முயற்சியால் சித்துாரில் பல பெரியோர்களைச் சந்தித்து உயர்நிலைப் பள்ளியில் தமிழ் படித்துக் கல்லூரியில் சேரும் தம் பிள்ளைகளைத் தமிழ் (பொதுவும் சிறப்பும்) எடுத்துப் படிக்கச்செய்ய பிரசாரமே செய்து இரண்டு பிரிவிலும் மாணாக்கர்களின் எண்ணிக் கையை ஆண்டுதோறும் அதிகரிக்கச் செய்து வந்தார். கிறித்தவ சமயத்தைப் பரப்புவதற்கு மேல் நாட்டிலிருந்து நம் நாடு போந்து பணியாற்றும் சமயத் துறவிகளை 1. பி. ஏ.பகுதி 1 பொது (a) ஏதாவது ஒரு இந்திய மொழி (b) ஆங்கிலம்: பகுதி II சிறப்பு ஏதாவது மூன்று பாடங்கள்; இதில் ஒன்று இந்தியமொழி அல்லது ஆங்கிலமாக இருக்கலாம்.