பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 355 யொப்பப் பெரும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கல்லூரியில் முதல்வராக இருந்தவர் திரு .ேS. N.S. ஆச்சாரியார் என்ற ஒரு வைணவர்: தமிழ்ப் பேசும் தெலுங்குப் பேராசிரியர்; திருப்பதியைச் சார்ந் தவர். தமிழ்த் துறை வளர்வதற்கு இவர் திரு. செளரிராஜ னுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தது பாராட்டத் தக்கது. நான் ஓராள் ஆணையமாகச் சென்றபொழுது உள்ளூர்ப் பெரியவர்கள் சிலரையும் என்னைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்திருந்தார். முதல்வர் இந்தச் சூழ்நிலை யைக்கருத்தில் கொண்டும்,முதல்வர் அளித்துவரும் ஊக்கத் தைக் கொண்டும் இட நெருக்கடி இருந்தாலும் முதல்வர் அளித்த உறுதி மொழியாலும் இத்தனைக்கும் மேலாக அரசுக் கல்லூரியாதலாலும் சிறப்புத் தமிழ் வகுப்பிற்கு பரிந்துரைத்தேன். அப்போது கல்லூரி முதல்வர் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவில் (Syndicate) உறுப்பின ராகவும் இருந்தார். இவ்வாறு பரிந்துரைக்கும்போது 1966-67ல் இப்போது பணியாற்றிவரும் திரு செளரி ராஜனைப் பேராசிரியராக உயர்த்துமாறும், அவருக்கு உதவியாக ஒரு விரிவுரையாளரை நியமிக்கவும் பரிந்துரைத்தேன். இதன்படி அடுத்த ஆண்டில் திரு செளரிராஜன் பேராசிரியரானார்;அவருக்குத் துணையாகத் திரு T. ச. இரகுபதி என்ற ஒருவர் விரிவுரையாளராக நியமிக்கப் பெற்றார்; இவ்வளவு செயல்கள் நடை பெற்றதற்குக் காரணம் திரு G.S.N.S. ஆச்சாரியார் புகழ்பெற்ற முதல்வராக இருந்து சிரத்தையுடன் நடவடிக்கைகள் எடுத்தமையேயாகும். இங்ஙனம் என் தமிழ்ப் பணி சித்துார் வரையிலும் எட்டியதற்கு என்னுள்ளே அந்தர்யாமியாக வீற்றிருக்கும் ஏழுமலை யப்பனின் திருவருளே காரணமாகும் என்பது என் அதிராத நம்பிக்கை. (5) டாக்டர் W.C. வாமன்ராவ் பேசுவதை விரும்பா தவர், கூட்டங்களில் தலைமைக்கு அழைத்தால், அல்லது