பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.56 நினைவுக் குமிழிகள்-4 பரிசுகள் வழங்கக் கேட்டுக் கொண்டால் மிக்க சிரமத் துடன் ஒப்புக் கொள்வார். ஆதலால் அவரைப் பெரும் பாலான கூட்டங்களில் பார்க்க முடிவதில்லை ஒரு சமயம் என்னிடம் பேச வேண்டுமானால் பேராசிரியர்களையும் துணைப் பேராசிரியர்களையும் கூப்பிடவேண்டும். என் போன்று பேச விரும்பாதவர்களை ஒதுக்கிவிடவேண்டும். அப்படி நான் வந்தே ஆகவேண்டுமானால் பரிசுகள் வழங்கும் பொறுப்புடன் என்னை விட்டுவிட வேண்டும்" என்று வற்புறுத்திச் சொன்னதாக நினைவு, பலரிடம் இவ்வாறே சொல்லியதாகவே அறிகின்றேன். பல்கலைக் கழகப் பொறுப்புகளை மிகத் தீவிரமாக நிறைவேற்றுவார். பிறருடன் அதிகமாகக் கலந்து கொள்ள விரும்புவதில்லை, தனிமையையே விரும்புவார். ஹ"க்கா பிடிப்பார்: அல்லது தோட்டந்தில் உலவுவார். புதிதாகத் திருப்பதி வந்ததும் சித்தார் சாலையில் காலையில் உலாவப் போவதுண்டு. சாலையில் .ே ப. ரு ந் து க ள், சாமான் வண்டிகள் அடிக்கடிச் செல்லும் இரைச்சலைக் கேட்டுத் தாங்க முடியாமல் சாலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டார். திருமாளிகைக்குள்ளேயே சுமார் 100 அடி நீளமுள்ள மாமரத்தின் நிழலில் திரும்பத் திரும்ப நடந்து கொண் டிருப்பார் உயிர்க்காட்சிச் சாலையில் கூண்டிற்குள் புனுகுப் பூனை நடப்பது போல். ஆனால் இவரது நடையில் வேகம் இருக்கும். ஒரு சமயம் ஏதோ அவசர வேலையாகக் காலை யில் 7-30க்கு அவரைப் பார்க்கச் சென்றேன். அதே சமயத்தில் திரு எம். பலராமரெட்டியும் (பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்) வந்து சேர்ந்தார். "நான் உலாவுகின்றேன். இன்னும் அரைமணி நேரம் ஆகும். அவசரமாக ஏதாவது பேசவேண்டுமானால் என்னோடு நடக்கத் தயாராகுங்கள். நடந்து கொண்டே பேசி, முடிப்போம்' என்றார் துணைவேந்தர். திரு பலராமரெட்டியும் உலாவுவதில் பெருவிருப்பு முள்ளவர். இவர் மாலையில்தான் உலவப் போவது