பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 357 வழக்கம். மாலையில் நாள் தவறாமல் அலர்மேல்மங்கை புரம் (3 கல் தொலைவு) வரை சென்று திரும்புவதை நான் அடிக்கடி பார்த்திருக்கின்றேன். துணைவேந்தர் கூறியதைக் கேட்டுத் திரு. பலராமரெட்டி அவருடன் நடக்கத் தயாரானார். ஏதாவது நிர்வாகப் பிரச்சினை பற்றிய பேச்சாக இருக்கலாம் என்று நான் ஒதுங்கிக் கொண்டேன். இருவரும் ஏதோ பேசி முடித்துக் கொண்டனர்; திரு. பலராமரெட்டியும் விடைபெற்றுச் சென்று விட்டார். நான் தொலைவிலிருந்து இவர்கள் நடந்து கொண்டே செயலாற்றுவதைக் கண்டு மகிழ்ந்த வண்ணம் இருந்தேன். துணைவேந்தர் தம் அறைக்கு வந்ததும் நான் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பினேன், (6) டாக்டர் W.C. வாமன் ராவ் முதன் முதலாகப் பதவியேற்ற சில நாட்களில் என்ன அவசரமாக இருந் தாலும் பெண்பாலார் தம்மைத் தம்திருமாளிகையில் காண் பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசரமாகப் பேச வேண்டுமானால் தொலைபேசியில் பேசலாம் என்றும், அலுவலகத்தில் எப்பொழுது வேண்டுமானானும்சந்தித்துப் பேசலாம் என்றும் அறிக்கை அனுப்பினார். ஆண்பாலார் இந்த அறிக்கையைக் கண்டு வியந்தனர்; பெண்பாலார் களில் சிலர் இதைக் கண்டு மகிழ்ந்தனர்; சிலர் முனு. முணுத்தனர். ஒரு சிலர் தமக்குள்ளே எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தனர். நிர்வாகத்தில் தலைமைப் பதவியி விருப்பவரைப் பிடிக்காவிடில் அவர் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து (1) பெண்களுடன் தொடர்புப்படுத்தி அவதூறு செய்திகளை - வதந்திகளைப் - பரப்புவர்; (2) கையூட்டு வாங்குவதாகச் செய்திகளைக் கிளப்புவர். இந்த இரண்டுமே வேண்டாதவர்களைத் தாக்குவதற்கு இவர்கள் கையாளும் ஆயுதங்கள்". இதையெல்லாம் நன்கு அறிந்து தெளிந்தவராதலால் இந்த இரண்டு விஷயங் களிலும் விழிப்புடன் இருந்தார். துணைவேந்தர்.