பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35榜 நினைவுக் குமிழிகள்-4 பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போலும்மே. மெய்போ லும்மே 2 என்பதை நன்கு அறிந்தவர். (7) பதவி முடியும் சில திங்கட்கு முன்னர் ஒருநாள் ஒய்வாகப் பேசிக் கொண்டிருந்தேன் அவர் திருமாளிகை யில். எதை எதையோ பேசிக் கொண்டிருந்தோம். இன்னவை என்று நினைவு இல்லை. அப்போது சொன்னேன் : ஐந்தாண்டுப் பணி முடியப்போகின்றது. புதிய சட்டப்படி துணைவேந்தர் பத்விக் காலம் மூன்றாண்டு என்று குறைக்கப் பெற்றுவிட்டது. பல்கலைக் கழக வளர்ச்சிக்குத் தாங்கள் யாதொரு முயற்சியும் எடுக்கவில்லை என்ற குறை பரவலாகச்சுமத்தப்படுகிறது’’’ என்றேன். அதற்கு அவர் ஏதோ ஒரளவு செய்தேன். நான் நினைத்தபடி செய்யவில்லை. செய்யவும் விரும்ப வில்லை. "ரெட்டி-நாயுடு மோதல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள், நிர்வாக இயந்திரம் அமைதி யாக நடைபெறட்டும்' என்ற நீலம் சஞ்சீவ ரெட்டியின் கருத்துப்படி நடத்தினேன். எதிலும் ஆழமாக இறங்கி என்னை உட்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் என் ஆட்சிக் காலத்தில் மோணாக்கர் வேலை நிறுத்தம் இல்லை. பல்கலைக் கழக வாளாகத் தில் .ெ சாத் து க ளு க் கு ச் சேதம் இல்லை; எந்தவிதம் கொந்தளிப்புக்கும் நான் இடந்தரவில்லை. இது போதும். உரோமாபுரி ஒரே நாளில் கட்டப் பெறவில்லை" என்ற உண்மையை அறிவீர்களன்றோ? நற்பெயர் வராவிட்டால் போகிறது. கெட்ட பெயர் வர வில்லையல்லவா?’ என்றார். பொதுவாக இவர் ஆட்சிக் காலத்தில் ஒகோ' என்று ஒன்று ஏற்படாவிடாலும், எங்கும் அமைதி நிலவியது என்பதை எவரும் ஒத்துக் கொள்வர். 2. வெற்றிவேற் கை-73