பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 359 (8) 1969 ஏப்பிரல் மாதத்தில் பறம்புமலையில் நடை பெற்ற பாரி விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் அக்காலத்தில் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி அவர்களைக் கொண்டு எனக்குப் பொன்னாடை போர்த்தச் செய்து அருங்கலைக் கோன்' என்ற விருதையும் வழங்கினார்கள். இதைக் கிடைத்தற் கரிய பேறாகக் கருதுகின்றேன். இஃது என் அறிவியல் நூல் களைப் பாரட்டி அளிக்கப் பெற்ற விருதாகும். அடிகளாரின் ஆசி எனக்கு நிரந்தரமர்க உண்டு. குமிழி-204 48. யுனெஸ்கோ : அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல் 1962sro, நினைக்கின்றேன். நான் குடும்பம் இன்றி தனியாக திருப்பதி தீர்த்த கட்டத் தெருவிலுள்ள ஒர் அறையில் தங்கி உணவு விடுதி உணவைக் கொண்டு காலம் கழித்தபோது சென்னை ஒரியண்ட்ல் லாங்க் மன்ஸ் கம்பெனியிலிருந்து திருமண் காப்புத் தாங்கிய முகப்பொலி வுடன் ஒரு வைணவ அன்பர் வந்தார்; என் அறையைக் கண்டுபிடிப்பதில் பலர் தொல்லைப் பட்டதை யான் அறிவேன். ஊர்ப்பெருமக்களிடம் சரியாகப் பழகாமையே காரணம் என்பதை நான் அறிவேன். எப்படியோ என் சிறு குடி லைக் கண்டு கொண்டு விட்டார். நான் ஏழுமலை யானைக் கண்டது போன்று பெருமகிழ்ச்சி அடைந்தேன். சிறிது நேரம் பொதுச் செய்திகளைப் பேசிக் கொண்டிருந் தோம். பின்னர் அவர் என்னைத் தேடிக் கொண்டு வந்ததைப் பற்றிக் கேட்டேன்.