பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.6 t) நினைவுக் குமிழிகள்.4 3 cuff Goguài, UNESCO : Source Book for Science Teaching என்ற நூலின் படியொன்றும் இருந்தது. அது திருத்திப் பெருக்கிய பதிப்பு. அவர் தம் கையிலிருக்கும் நூலை என்னிடம் தந்து இதைத் தமிழாக்கம் செய்து தர வேண்டும்; இதற்காகத்தான் உங்களைத் தேடிக் கொண்டு வந்தேன்’ என்றார். * தமிழகத்தில் எத்தனையோ ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்ளார்களே. அவர்களைப் புறக்கணித்து விட்டு என்னைத் தேடிக் கொண்டு வந்ததன் காரணம் என்ன?’ என்று வினவினேன். காரைக்குடி யிலிருந்தபோதே தங்களைப்பற்றிக் கேள்வியுற்றிருக் கின்றேன். அறிவியல் படித்த தமிழ்ப் பேராசிரியர்கள் அரியர். அவர்களுள்ளும் எழுத்துப் பழக்கம் உள்ளவர்கள் மிகஅரியர். பயிற்சிக் கல்லூரி அநுபவம் பெற்றவர்களே இல்லை என்று சொல்லலாம். தவிர, உங்கள் தமிழ்ப் பயிற்றும் முறை, அறிவியல் பயிற்றும் முறை, கல்வி உளவியல், அணுவின் ஆக்கம் போன்ற நூல்களையெல் லாம் பார்த்த பிறகு தாங்கள்தான் இந்த நூலைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கவே வந்தேன். இதைக் காரணமாக கொண்டு ஏழுமலையானையும் சேவிக்கலாமல்லவா?' என்று குழைந்து பேசினார். எனக்கும் அச்சமயம் வேலை நெருக்கடி இல்லா திருந்தது. பணியை ஒப்புக் கொண்டேன். ராயல் அளவில் இரண்டு பத்திகளாக நூற்றுக்கணக்கான படங்களுடன் கூடிய நூல். இந்து நாளிதழ்களில் உள்ள எழுத்துகள் போல மிகச்சிறிய எழுத்துகளால் அச்சிடப் பெற்றிருந்தது. சன்மானம் பற்றிக் கேட்டபோது ரூ. 600/- தருவதாகத் கம்பெனியின் திட்டம்' என்றார். ஒராண்டு முழுவதும் ஓயாமல் செய்தாலும் முற்றும் பெறாது. வேலை அதிகம்' என்பதை நன்கு அறிந்தும் பணியை ஒப்புக் கொண்டேன்: தொடங்கினேன் பணியை. செய்யும்போது தான் சிரமம் தெரிந்தது. இதே சமயத்தில் இளைஞர் வானொலி, இராக்கெட்டுகள், அதிசய மின்னணு போன்ற சிறு நூல்