பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுனெஸ்கோ: அறிவியல் பயிற்றும் மூலமுதல் நூல் 36 I களையும் எழுதும் திட்டங்களையும் வைத்திருந்தேன். இவற்றில் ஒவ்வொன்றிலும் ஐம்பதிற்கு மேற்பட்ட படங்களை அமைக்கும் திட்டமும் இருந்தது. வாழையடி வாழை (Genetics) என்ற நூலும் உருவாகிக் கொண்டி ருந்தது. இந்த நிலையில் பிஎச்.டிக்குப் பதிவு செய்து கொள்வதில் தீவிரமாக முயன்று கொண்டிருந்தேன். இதற்கு இசைவு வந்து விட்டால் இத்தனைத் திட்டங் களும் பணிகளும் நிறுத்தி வைக்கப்பெறும் என்ற அச்சமும் உள்ளூர இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எம்பெருமான் மீது பாரத்தைப் போட்டு மொழி பெயர்ப்புப் பணியைத் தொடங்கினேன். தொடங்கின போது இதன் முழு தாற்பரியமும் தெளிவாகியது. * இயற்பியல், வேதியியல், தாவர இயல், விலங்கியல், அ னியல், உயிரியல், மானிடஇயல்-என்ற இத்தனைத் துறை அறிவு இருந்தால்தான் இதைச் செவ்வையாகச் செய்ய முடியும். அறிவியல் பயிற்றும் முறைகளைப் பற்றிய தெளிவும் இருத்தல் வேண்டும். கலைச் சொற்களின் அறிவு நன்கு அற்றுபடியாயிருக்க வேண்டும். இவை தவிர எழுதுவதில், மொழிபெயர்ப் பதில் ஈடுபாடும் வேண்டும்'என்ற கருத்து என் மனத்தில் எழுந்தது. இந்தப் பணிக்கு ஒப்புக்கொண்ட ஊதியம் மிகக் குறைவு. பார்வைப்படிகளைச் சரிபார்ப்பவரே இந்த ஊதியத்தில் இரண்டு மடங்கு பெறுவார் என்பதும் தெரியும். ரூ 1000 - தருவதாக இருந்தால் ஒரளவு கட்டுபடியாகும். நேஷனல் புக் டிரஸ்டு மூலம் இப்பணி கிடைத்தால் ரூ 3000). கிடைக்கும் என்பதையும் நான் நன்கு அறிவேன். இங்குப் பணிபெறுவதெல்லாம் பரிந்துரை களின்மூலம் நடைபெறுகின்றன. என்றாலும் இப்பணி 'அறிவியல், தமிழ் மக்கள், அறிவியல் பயிற்றும் ஆசிரியர் கள் பயிலும் மாணவர்கள்-இவர்கட்கு அர்ப்பணிக்கும் தொண்டாக இருக்கட்டும்' என்ற தியாகச் சிந்தைதான்