பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 3. நினைவுக் குமிழிகள். 4 உந்து விசையாக இருந்து என்னை இப்பணியை முற்று. விக்கச் செய்தது. இப்பணி என்னை இரண்டாண்டு அளவும் இழுத்துச் சென்றது. பணி ஒப்புக் கொண்ட போதிருந்த மேலாளர் ஒய்வு பெற்றார்; புதியவர்-ஒரு கிறித்தவர்-பணி யேற்றார். ரூ 150/-ஊதியம் ஏற்றித் தரும் படியும் பார்வைப் ப்டிவங்களைச் சரிபார்த்து அனுப்புவதற்கு, அஞ்சல் செலவாக ரூ 160| தரும் படியும் புதியவருக்கு. எழுதினேன்; ஒப்புக் கொண்டார். நான் குறைந்த ஊதியத் திற்கு வகையாக மாட்டிக் கொண்டேன் என்பதை அவர் நன்கு அறிவார். இல்லாவிட்டால் ரூ. 250/- ஏற்றித்தர ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். எழுத்துப் பிழைகளை மட்டிலும் சரிபார்த்தால் போதாது. இத்தகைய நூலில் மூலத்தை வைத்துக் கொண்டு படங்களைச் சரிபார்க்க வேண்டும். படங்கள் அமைந்த பிறகு பக்க அழகைப் பார்க்க வேண்டும். அறிவியல் நூல்களைப் படங்களுடன் தயார் செய்யும் ஆசிரியர்தாம் இந்த நுட்பங்களை எல்லாம் நன்கு அறிய முடியும். நூலை 1965க்குள் முடித்துக் கொடுத்து விட்டேன், அச்சிடுவதில் பல சிரமங்கள். எட்டு பாயிண்ட் அளவு: எழுத்துகளில் செய்யவேண்டும். 10, 11 பாயிண்டு எழுத்து களில் செய்தால் நூல் பெரிதாகும். நூலின் விலை அதிக மாக வைக்க வேண்டி வரும். இவற்றையெல்லாம். கவனித்து அச்சேற்றிப் பார்வைப் படிவங்கள் எனக்கு வருதல் அவற்றைச் சரி பார்த்துத் திருப்பி அனுப்புதல் இவையெல்லாம் நூல் வெளிவருவதைத் தாமதப்படுத்தும். எப்படியோ நூல் ஏப்பிரல்-1969 இல் மிக அழகாக வெளிவந்தது. இஃது என்னுடைய இருபத்திரண்டாவது வெளியீடாகும். அப்போது துணைவேந்தர் டாக்டர் W.C. வாமன்ராவ் பணியில் இருந்தார். ஒரு படி அவருக்கு. வழங்கினேன். அவர் "இஃது ஒரு அசுவமேத யாகம்’ என்று பாராட்டினார்.