பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-295 49. புதிய துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாதரெட்டி பணி ஏற்றல் டாக்டர் டி. ஜகந்நாத ரெட்டி பதவி ஏற்றது 1969 செப்டம்பர் என்பது என் நினைவு. இவர் பதவி ஏற்ற ஒன்றிரண்டு வாரங்களில் தமிழ் வளர்ச்சிக்கென நான் தமிழக அரசிடம் மானியம் பெறுவதற்கென்று மேற். கொண்ட பகீரதப் பிரயத்தனம் பழம் ஆயிற்று. ஆண்டிற்குப் பத்தாயிரம் வீதம் ஐந்தாண்டுகட்கு மானியம் வழங்குவதென்ற ஆணையைத் தமிழக அரசு பிறப்பித்தது. டாக்டர் டி. ஜகந்நாத ரெட்டிக்கு இது பெருமகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும் என்பதைப் பின்னர் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளால் ஊகிக்க முடிந்தது. எந்த துணைவேந்தர் புதிதாக வந்தாலும் ஒவ்வொரு துறையிலும் சங்கக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கவோ, அல்லது அதன் நிறைவுக் கூட்டத்தை முடிக்கவோ அழைப்புகள் இருக்கும் பல்கலைக் கழக வட்டத்தில் இஃது ஒரு மரபாக வழங்கி வரும் பழக்கமாகும். இதனால் புதிய துணைவேந்தரை எடை போட்டுப் பார்ப்போருக்கு ஒரு வாய்ப்பு: கால் கை பிடிப்போருக்கும் ஒரு வழி டாக்டர் ரெட்டியின் பேச்சு நன்றாக இருக்கும் சிலர் போல் வாய்க்கு வந்தபடிப் பேசமாட்டார்; பேசவேண்டிய பொருளை நன்குச் சிந்தித்து வகைப்படுத்திக்கொண்டு வந்து பேசுவார். பேசுவதற்கும் விரும்புவார். இவரது இந்தப் பழக்கத்தை எல்லோரும் அறிந்து கொள்ள முடிந்தது. பல கூட்டங்களுக்குப் போய் வந்து கொண்டிருந்தேன். தமக்கும் தமிழ் இலக்கியத்தைப்பற்றிச் சிறிது தெரியும்