பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 நினைவுக் குமிழிகள்-4 என்பதைக் காட்டிக் கொள்வார். பேசும் போது நான் இருப்பது அவருக்குத் தெரிந்துவிட்டாலோ தமிழ் இலக்கியத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது கம்ப ராமாயணத்தின் ஏழு தொகுதிகள்’ என்பார்: "திருக்குறள் உலகப் பெரிய இலக்கியங்களுள் ஒன்று, என்று குறிப்பிடுவார். சங்க இலக்கியங்கள் தேசிய கவி பாரதியாரின் படைப்புகள்' என்று பேசுவார். சில கூட்டங் கட்கு நான் போக முடியாத நிலை ஏற்பட்டு விடும். அப்போது இவர் கண்கள் என் இருப்பைத் துழாவும்' என்றும் மிஸ்டர் ரெட்டியார் எங்கே? வரவில்லையா?* என்று கேட்பார் என்றும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக் கின்றேன், மிஸ்டர் ரெட்டியாரின் முயற்சியால் தமிழக மானியம் வந்திருக்கின்றது; வருகின்ற ஆண்டு தமிழ் முதுகலை வகுப்பு தொடங்கப்படும்’ என்று குறிப்பிடுவார். 'நாவலர் நெடுஞ் செழியனைக் கொண்டு விழா அமைத்து முதுகளை வகுப்பு தொடங்கலாமா?’ என்பார் நான் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டால். சில சமயம் இவரது பேச்சு அரசியல்வாதியின் பேச்சுபோல் ஒளி விட்டுக்காட்டும். கூடியிருப்போர் மகிழ்வதற்காகவே சில நிகழ்ச்சிகளை நகைச்சுவையாகக் குறிப்பிடுவார், பேச்சின் போக்கு இளைஞர்களின் கவனத்தை ஈர்ப்பதாக வும் அமையும். பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலுநாயுடு, டாக்டர் W.C.வாமன்ராவ், டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி, பேராசிரியர் K. சச்சிதானந்த மூர்த்தி என்ற நான்கு துணைவேந்தர்களின் செயல்களை நேரில் கண்டவன் நான். ஆகவே, ஒவ்வொருவடைய நோக்கம், போக்கு, செயலாற்றும் திறன் முதலியவற்றை எடைபோட்டு மதிப்பிட்டுப் பார்க்க முடியவனாகின்றேன். எவர் இருந் தாலும், இல்லாவிட்டாலும் அன்றாடத் தேவைகளை நிர்வாக இயந்திரம் பூர்த்தி செய்துவிடும். கொள்கைகளை வகுத்துக்கொண்டு ஆட்சிக் குழுவினரை அணைத்து