பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் ம. சகந்நாதரெட்டி 365 கொண்டு துணைப் பேராசிரியர்களின் யோசனைகட்கு மதிப்பு தந்து, பொதுமக்களின் ஆதரவையும் பெற்றுச் செயலாற்றினால் பல்கலைக் கழகத்தின் பன்முக வளர்ச்சி பாங்குற அமையும். இவற்றையெல்லாம் கருத்திற் கொள்ளாது அதிகார ஆணவத்துடன் தான்றோன்றிதன மாகச் செயற்பட்டால் பல்கலைக் கழக வளாகத்தில் கிளர்ச்சிகள், எதிர்ப்புகள் தோன்றி ஆக்க வேலை கட்குக் குந்தகம் விளைவிப்பதைக்காணலாம். இவை எல்லாவற்றை யும் கருத்திற் கொண்டாலும், மாணாக்கர்களின் தேவை கள், அவர்களின் உள்ளக்கிளர்ச்சிகள், மாணாக்கர்களின் விடுதிகளில் உறைபவர்களின் வசதிகள் இவற்றிற்கு முதலிடம் தருதல் வேண்டும். மாணாக்கர்கட்கு ஒன்றும் தெரியாது, அவர்களைப் பொம்மைகள் போல் இயக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் அஃது நெருப்புடன் விளையாடுவது போலாகிவிடும். கல்லுரரிகள், பல்கலைக் கழகங்கள், மாணாக்கர் விடுதிகள் இவற்றில் ஏற்படும் கொந்தளிப்புகளைக் கூர்ந்து நோக்கினால் பெரும்பாலும் இவற்றிற்குரிய காரணம் நிர்வாகத்தையே சார்ந்திருப் பதைக் காணலாம்; அரசியல் கட்சிகள், சாதியுணர்ச்சி களைத்துாண்டி விடும் ஆசிரியர்கள் இவர்களின் தலையீடு மட்டிலும் இல்லாதிருந்தால் மாணாக்கர்களின் மீது குற்றப் பத்திரிகை வாசிப்பதற்கே இடம் இராது என்பது நெஞ்சில் கைவைத்து உணர்பவர்கட்கு, சிறிதும் விருப்பு வெறுப் பற்றுச் சிந்திப்பவர்கட்குப் புலனாகாமற போகாது. பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர் களும் டாக்டர் டி. ஜகந்நாத ரெட்டி அவர்களும் பல்கலைக் கழகப் பன்முகவளர்ச்சிக்கு மேற்கொண்ட முயற்சிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பெற வேண்டியவை. சாதி வெறி சமய வெறி இல்லாமல், புலமைக்கும், செயலாற்றும் திறமைக்கும் தொண்டுள்ளம் கொண்டமைக்கும் மதிப்பு தந்து, மதிப்பீடு செய்யும் பண்புடையவர்களின் கவனத்திற்கு மட்டிலும்தான் இவர்