பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 நினைவுக் குமிழிகள்-4 கள் தன்மை, மனப்பான்மை முதலியவை தட்டுப்படும். பேராசிரியர் கோவிந்தராஜுலு நாயுடுவும் டாக்டர் டி. ஜகந்நாத ரெட்டியும் அல்லும் பகலும் பல்கலைக் கழக் வளர்ச்சியையே சிந்தனையில்கொண்டவர்கள். தேவஸ்தான ஆண்கள் கலைக் கல்லூரியின் கட்டடத்தில் பல்கலைக் கழக எல்லாத் துறைகளும் அடங்கிக் கந்தறு கோலமாகக் காட்சியளித்தது அதிலும் அறிவியல் துறைகளாகிய இயற்பியல், வேதியியல் விலங்கியல், தாவர இயல் நில உட் கூற் றியல் ஆகிய ஐந்து அறிவியல் வறைகளும் தளவாடங்களுடன் அடங்கிக் கிடந்த நிலை கந்தறு Gastravuorgs (Pandimonium) struist யளித்தது. ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளாதாரம் புள்ளியியல், தெலுங்கு (தமிழ்), உருது, வடமொழித்துன்ற கள் நெரிசலாக அடங்கிக் கிடந்த காட்சி பரிதாபத்திற் குரியது. இந்தக் கட்டடத்திலேயே முதல்வர் அலுவலகமும் இரண்டு பெரிய அறைகளை ஆக்கிரமித்துக் கொண் டிருந்தது. ஆடவரும் மகளிரும் சேர்ந்து பயிலும் கல்லூரி களில் மகளிரும் பெண் பேராசிரியர்களும் தனிமையாகத் தங்குவதற்கென்று ஒதுக்கப் பெறுதல் மிகவும் இன்றியமை யாதது. இவர்களுக்குத் தரப்பெற்றிருந்த வசதிகள் இரக்கப்படத்தக்கவையாக இருந்தன. மாணாக்கர்களின் எண்ணிக்கையும் (இளங்கலை, முதுகலை வகுப்புகளிலும்) குறைவ ாகஇருந்தமையாலும்ஆராய்ச்சிக்குரிய மாணாக்கர் கள் 150 எண்ணிக்கையைத் தாண்டாமலும் இருந்தமை யால் எல்லாம் ஓரளவு சிரமத்துடன் இயங்கி வந்தன. பல்கலைக் கழக மானிய ஆணையத்திடமிருந்து மானியம்பெறல், ஆந்திர அரசிடமிருந்து மானியம் பெறல், கிடைப்படங்கள் (Plans) தயார் செய்யப் பெற்று அங்கீகாரம் பெறல் இவையெல்லாம் மிக விரைவாக முடுக்கப் பெற்றாலும் 1964இல் தான் இரண்டு அறிவியல் கட்டடத்தொகுதிகள் தயாராயின. இயற்பியல்,வேதியியல்