பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாதரெட்டி 367 இவற்றிற்குரியவை முதலிலும், ஆறு திங்கள் கழித்து தாவர இயல், விலங்கியல், நிலஉட்கூற்றியல் இவற்றிற் குரியவை தயராயின. ஆங்கிலம், வடமொழி, வரலாறு, தமிழ், புவியியல், உளவியல், இத்துறைகளுக்குரிய கட்டடத் தொகுதிக்குரிய வேலைகள் ஆமை வேகத்தில் நடை பெற்றன. கட்டடப் பொருள்களின் விலை ஏறிக்கொண்டே சென்றதால், குத்தகையாளர் கட்டும் வேலையை நிறுத்தி விட்டார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் பல்லாண்டுகள் ஆகுமென்று கருதி புதிதாக உடன்படிக்கை செய்துகொண்டனர். கட்டட அளவுகளில் ஒன்பதில் ஒன்று (நீளம், அகலம், உயரம்) குறைத்துக் கட்ட ஒப்புக் கொண்டார் குத்தகையாளர். 1965-66இல் இக்கட்டத் தொகுதி வேலையும் நிறைவு பெற்றது. துறைகள் யாவும் புதிய இடத்திற்கு மாறின. பொருளாதாரம், கணிதம், புள்ளியியல், அரசியல், மானிட இயல் (Anthropology) கல்வி, வயது வந்தோர் கல்வித்துறைகள் பழைய கட்டடத் தில் அமைந்தன: இவற்றின் நெரிசல் நீங்கியது. நூலகக் கட்டட வேலை 1962-63க்குள்ளே முடிந்துவிட்டது; நல்ல முறையில் அமர்ந்து கொண்டது. பல்கலைக் கழகத்தில் எல்லாத்துறைகளின் இதயம் போன்ற இதற்கு முன்னுரிமை அளித்தார் முதல் துணைவேந்தர் Gusrirgoff turf எஸ். கோவிந்தராஜுலு நாயுடு. 1959-இல் புதிதாகத் தொடங்கப்பெற்ற பொறியியற் கல்லூரிக்குக் காரைக்குடியில் பணியாற்றிய பேராசிரியர் ஜி. இராமகிருஷ்ணன் தனி அலுவலராக (Special Officer) நியமனம் பெற்றார், இவர் கோயம்புத்துரைச் சேர்ந்த வர். நேர்மைக்கும் திறமைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். இவர் பொறுப்பில் கல்லூரி நாளொரு மேனி யும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. கட்டடங் களும் திட்டப்படி ஆண்டுதோறும் வளர்ந்தன; மாணாக்கர் விடுதிக் கட்டடங்களும் விரைவில் கட்டப்பெற்றன. புதிய துறைகள், முதுகலை வகுப்புகள் தொடங்கப் பெற்றமைக்