பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔6鑫 நினைவுக் குமிழிகள்-இ. கேற்றகட்டடங்களும் சோதனைக் கூடங்களும் வளர்ந்தன. இடைஇடையே மாணாக்கர்களின் வேலை நிறுத். தங்களும் தோன்றி அனைவருக்கும் கவலை உண்டாக்கும். தற்காலத்தில் இத்தகைய கொந்தளிப்புகள் தவிர்க்க முடியாதவைகளாகி விட்டன. டாக்டர் டி. ஜகந்நாதரெட்டி காலத்தில் கட்டடங்கள் என்று மில்லாத அசுரவேகத்தில் வளர்ந்தன; விரிந்தன ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியிலும் இவரது கவனம் சென்றது. ஒரு பெரிய பொறியியல் வல்லுநர்போல் செயற்பட்டார்; வசதிகள் வளர்ந்தமை ஒரு புறமிருக்க எதிலும் இவர் உள்ளத்தில் முகிழ்த்த கலை உணர்ச்சி கட்டடங்களிலும் வசதிகளிலும் துலங்கின. பல்கலைக் கழக வளாகமே ஓர் இந்திரபவனம்போல் மாறத் தொடங்கியது. வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமான மண்சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது புழுதிகளைக் கிளப்பிக் கொண்டு செல்லு, வதால் மாணாக்கர்கள், பல்கலைக் கழகத்திற்கு வரும் பெற்றோர்கள் முதலியவர்களின் உடல் நலம் கெடும் என்பதை அறிந்தார் துணைவேந்தர். எங்கெங்கோ ஒதுங்கிக் கிடந்த நிதிகளைத் தேடி எடுத்து முதல் வேலை யாகத் தார் சாலையாக மாற்றச் செய்தார். எத்தனை வாகனங்கள் ஒடினாலும் புழுதியும் துர்சியும் கிளம்பாத சூழ்நிலை வளாகத்துக்குப் புதிய பொலிவினை நல்கியது. ஆசிரியர்க்குடியிருப்புபகுதிகளில் உள்ள சாலைகளும் தார் சாலைகளாயின. சாலைகளின் ஓரங்களில் எங்கெங்கு மரங்கள் இருந்தால் அழகு தரும் என்று கருதினாரோ அங்கெல்லாம் மரங்களை நட்டுப் பாதுகாப்புடன் பராமரிக்கச் செய்தார். துணைவேந்தர் திருமாளிகை அகன்ற பரப்புள்ள இடத் தில் மாந்தோப்புகளுக்கிடையே அமைந்துள்ளது. அதற்குள் அங்கும் இங்குமாகப் பல கற்சிலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன; அவற்றுள் சில குறையுறுப்புகளுடனும் காட்சி