பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாதரெட்டி 369 யளித்தன. இவற்றை ஒன்று திரட்டி ஒரிடத்தில் கலைக் கூடமாக்கக் கருதினார். திருப்பதி-சித்துரர் நெடுஞ் சாலையிலிருந்து பல்கலைக் கழக வளாகத்தில் நூலகத் திற்குச் செல்லும் குறுஞ்சாலையின் இருபுறங்களிலும் நேருக்கு நேராக அமையுமாறு நடச்செய்து அவற்றைச் சுற்றி அழகான சிமிட்டி மேடையையும் அமைக்கச் செய்தார். அறிவுக் கலைக்கூடமாகிய நூலகத்திற்குச் செல்வோர் கலையுணர்ச்சியுடன் செல்வதற்கு இச்சிலை கள் வாய்ப்பாக அமைந்தன; பார்ப்பதற்கு இச்சாலை ஒர் அரும்பொருள்காட்சியகக் களையையும் நல்கியது. இன்று அவை அகற்றப் பெற்று விட்டன; அவை ஊருக்குள் உள்ள தேவஸ்தானத்தின் அருங்கலைக் காட்சியகத்தைப் புகலிடமாகக் கொண்டுவிட்டன. முதல் துணைவேந்தர் பேராசிரியர் நாயுடுகாலத்தில் திட்டமிடப் பெற்றுக் கிடைப்படவடிவில் கிடந்த திட்டங் கள் பல்வேறு காரணங்களால் செயற்படாமற் கிடந்த வற்றை எல்லாம் செயற்படச்செய்து நிறைவு செய்தார். இப்படி நிறைவு செய்த கட்டடங்கள் மூன்று: அவை: (1) பல்கலைக் கழக நிர்வாக அலுவலகம், பதிவாளர் துணைவேந்தர் அறைகள், தேர்வாளர் அலுவலகம், பொறியாளர் அலுவலகம் பேரவை மண்டபம் முதலியவை அடங்கிய பெரிய கட்டடம் இஃது. இன்று நீலம் சஞ்சீயரெட்டி பவனம்' என்ற திருநாமத்தால் மிகப்பொலி வுடன் திகழ்கின்றது, இதில் மின்விசை ஏற்றம் பொருத்தப்பெற்றுள்ளது.பேரவையின் இருக்கை வசதிகள் மிக அழகாக அமைந்துள்ளன. ஒவ்வொரு உறுப்பினரும் பேசுவதற்கு மாநிலச்சட்டப் பேரவையிலும் நாடாளும் மன்றப் பேரவையிலும் இருப்பனபோல் ஒலி வாங்கிகள் (Micorphones) பொருத்த பெற்றுள்ளன. துழைவாயிலை ஏழுமலையான் திருவுருவப் படம் அணிசெய்கின்றது. இருக்கை வசதிகள் படிமேடை முறையில் அமைக்கப் நி-24