பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ 76 நினைவுக் குமிழிகள்-4 பெற்றுள்ளன. ஒருபக்கம் வேமனர் திருஉருவமும் அதற்கு எதிர்ப்பக்கம் திருவள்ளுவர் படமும் அணிசெய்கின்றன. ஒவ்வொரு விவரங்களிலும் துணைவேந்தரின் கற்பனை உள்ளத்தையும் கலை உணர்ச்சியையும் கண்டு மகிழலாம், (2) கலையரங்கம் (Auditorium) : இது உருப்பெறும் போது ஒவ்வொரு சிறு விவரங்களிலும் தம் நேர்க் கவனத் தைச் செலுத்தினார். நீள்வட்ட (Hyperbola) அமைப்பில் உள்ள இம்மண்டபத்தின் உட்புற அமைப்பு கண்டாரை வியக்கவைக்கும் பான்மையது. இருக்கை வசதிகள், நாடக நாட்டியங்களுக்கான மேடை அமைப்பு, திரைச்சீலை அமைப்புகள் இவை மிகநன்றாக அமைக்கப் பெற்றன. இவ்வளவும் தயாராகித் திறப்பு விழாவுக்கும் ஏற்பாடு செய்யப் பெற்றுவிட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகத் திரைச் சீலைகள் பொருத்தப்பெற்றன. மேடைக்குமேலே மின்சாரத்தைக்கொண்டு ஏதோ பற்றவைக்கப் பெற்றது; வேலையும் இரவில் நடைபெற்றது. தீப்பொறி குறிதவறி வேறுதிசையில் சென்று அரங்கக் கூரையில் தீப்பற்றிக் கொண்டது. (பற்றவைத்தவர் குடிபோதையில் இருந்த தாகக் கருதப்பெறுகின்றது). அங்கிருந்தவர்கட்கெல்லாம் ஒரு பிரமிப்பு ஏற்பட்டுவிட்டது. திரு. வேங்கட்டரங்கம் என்பவர் திரைச் சீலைகளை உருவிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டார். பிறரும் வெளியேறினர். சிறிது நேரத்திற்குள் அரங்கக் கொட்டகை முழுதும் தி சூழ்ந்து கொண்டது; எங்கும் ஒரே புகைப்படலம். தீயணைக்கும் பொறிக்கு ஏற்பாடு செய்வதற்குள் நல்ல உயர்ந்த மெத்தையுடன் கூடிய இருக்கைகள் யாவும் சாம்பலாயின. நேரில் கண்ணுற்றவர்கள் அழாமல் இருக்கமுடியாது. பெருநட்டம் ஒரு புறம் இருக்க அழகே வடிவங்கொண்ட ஒரு கலை மண்டபம் முடியும் நிலையில் இப்படி நாசமானதை நெஞ்சை உருக்கும் செய்தியாகிவிட்டது. தமது கற்பனைச் சிறகைப் பறக்கவிட்டு அல்லும் பகலும் பாடுபட்ட துணைவேந்தர் டாக்டர் ரெட்டியின் மனம்