பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாதரெட்டி 371 என்னபாடுபட்டிருக்கும் என்பதை உணர்ந்து கூடப் பார்க்க ՅԲւգ-եւ1T5 துணைவேந்தர் மனம் தளர்ந்து போகவில்லை, இறைவழிபாட்டில் தோய்ந்தவராதலால் இவர் மனம் ஒடிந்துபோகவில்லை. இதை இறைவன் திருக்குறிப்பின் படியே நடைபெற்றிருக்கவேண்டும் என்று நம்பினார். ஒரு சமயம் திருவேங்கடமுடையானை தரிசிக்கச் சென்ற குயூ" வரிசையில் நெருக்கித் தள்ளும் நிலை (Stampede) ஏற்பட்டுப் பத்துப் பதினைந்து பேர் இறந்து போகும் நிலை ஏற்பட்டது. பக்தர்கட்குக்கூட-அதுவும் இறைவழி பாட்டில் செல்லும் பக்தர்கட்கும்-இந்நிலை ஏற்பட வேண்டுமா? என்று பக்தர் உலகமே திடுக்கிட்டது; வகை யறியாது குழப்பத்தில் ஆழ்ந்தது. பத்திரிகைகளில் இந்தச் செய்தியைக் கண்டதும் அறிஞர் உலகம் தம்பித்து நின்றது. இறைவழிபாட்டில் நம்பிக்கை அற்றுப் போகுமோ என்று அஞ்சியது. அச்சமயம் காஞ்சி முனிவர் (பெரியவர்) திருக்கோயில் நிர்வாகத்தில் ஏதோ குறை இருக்கின்றது; அது இன்னது என்று குறிப்பிட முடியாது. அதன் அறிகுறியே இந்த விபத்து, கோயில் நிர்வாகம் தம்மனத் தைச் சோதித்து குறையினைப் போக்கிக் கொள்வார் களாக' என்ற செய்தியை வெளியிட்டார். இதனைத் துணைவேந்தர் டாக்டர் ரெட்டி படித்திருக்க வேண்டும்; அதைப் பல முறை சிந்தித்து உணர்த்திருக்க வேண்டும். பல்கலைக்கழகம் கலைமகளின் பெருங்கோயில் அல்லவா? தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம், உய்வம் என்ற கருத்துடை யோர்கள் உயிரி னுக்குயி ராகிய தெய்வம்: செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடும் தெய்வம்;