பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37逻 நினைவுக் குமிழிகள்-கீ கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம் கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்." என்ற பாரதியாரின் பாடல் இதை எழுதுங்கால் மனத்தில் எழுகின்றது. துணைவேந்தர், உன்னை உள்ள படியறியோம்; உலகம் உள்ள திறமுள்ளோம்; பின்னை யறியோம்; முன்னறியோம் இடையும் அறியோம் பிறழாமல்; நின்னை வணங்கி நீ வகுத்த நெறியின் நிற்கும் அதுவல்லால் என்னை யடியேம் செயற்பால இன்ப துன்பம் இல்லோனே.” என்ற பாடல் அறியாராயினும் இதிலுள்ள கருத்துகள் அவர் சிந்தையில் முகிழ்த்திருக்க வேண்டும். உடலிலுள்ள நரைதிரை முதலியன ஆன்மாவைச் சேராதவாறு போல. உலகத்து நிகழும் இன்ப துன்பங்கள் உலகத்துயிர்கெல்லாம் உயிரான பரமான்மாவைக் சேரா என்ற கருத்து நம்மைச் சிந்திக்க வைக்கின்றது. இறையருளால் முரட்டுத் துணி வோடு செயற்பட்டார் துணைவேந்தர். பல்கலைக் கழகப் பணிய: ௗர் (எல்லா நிலையினரும்) ஒருநாள் ஊதியம் தந்தனர்; சில வங்கிகள் நன்கொடைகள் வழங்கின. தனிப் பட்டோரிடமிருந்து சில பல கம்பெனிகளிடமிருந்தும் நன்கொடைகள் வந்து குவிந்தன. இவையெல்லாம் தீக் கடவுள் இரையாகக் கொண்ட பொருள்கள் வாங்கப் போதா. இறையருளால் கட்டடத்திற்கு அதிகச் சேதம் இல்லை; பொறியாளர்கள் இதனைச் சோதித்து அறிந் 1. பா. க : வெள்ளைத் தாமரை-4. .ே கம்ப. யுத்தகா. பிரம்மாத்திரப்-223,