பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாதரேட்டி 373 தனர். ஆறு திங்களில் துணைவேந்தர் மயன் போல் செயற் பட்டார்; மீண்டும் கலையரங்கம் மறு பிறவி எடுத்தது. நிதி போதாததால் புதிய பிறவி இரண்டாந் தரமாக அமைந்தது. இதுவும் இறைவன் செயல் என்று அவரோடு சேர்ந்து பல்கலைக்கழகப் பணியாளர்கள் அனைவருமே மகிழ்ந்தனர். (3) மகளிர் விடுதி : மகளிர் தொகை பல்கலைக் கழகத்தில் பெருகி வருவதைக் கண்டார் துணைவேந்தர். தேவஸ்தானத்தைச் சேர்ந்த மகளிர் விடுதிக்குரிய கட்டடம் போதாதிருந்தது (இது தொடக்கக் காலத்தில் பல்கலைக் கழகத்திற்குத் தரப் பெற்று விட்டது). இதனையொட்டி மிகவும் அழகான முறையில் மற்றோர் இரண்டு மாடிக் கட்டடத்தை எழுப்பச் செய்து அவர்கட்கு தேவை யான வசதிகளைப் பெருக்கினார். மகளிர் விடுதிகளில் மகளிர்கெனத் தனிப்பட்ட முறையில் தேவைப்படும் ககாதார வசதிகட்கு வழியமைத்துத் தந்தார். சிறந்த மருத்துவ வல்லுநரல்லவா? (4) விருந்தினர் மாளிகை : பல்கலைக் கழகம் விரிவிற் கேற்ப வெளியிலிருந்து வரும் விருந்தினர்களின் எண்ணிக் கையும் பெருகத் தொடங்கியது. வருகின்றவர்கள் தங்கு வதற்கும், உணவு கொள்வதற்கும் வசதிகள் இல்லாமல் தவித்தனர். தேவஸ்தான சத்திரங்கள், விருந்தினர் இல்லங்கள் கை கொடுத்து உதவினாலும் வாகன வசதி யில்லாமையால் தொல்லைப்பட்டனர். பல்கலைக் கழக வளாகத்திலேயே தங்குவதற்குப் உணவுக்கும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் துணைவேந்தர் டாக்டர் சுகந்நாத ரெட்டி, பல்கலைக் கழக வளாகத்தில் ஆசிரியர் குடியிருப்பை யொட்டி ஒரு விருந்தினர் மாளிகையை எழுப்பினார். குளியலறை கழிப்பறைகளுடன் அமைந்த தங்கும் அறைகள், குளிர்சாதன முள்ள சில அறைகள், பலர் சேர்ந்தாற் போல் அமர்வதற்கு இருக்கை