பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总7盘 நினைவுக் குமிழிகள்-4 வசதியுள்ள இரண்டு அறைகள், விருந்துகள் நடைபெறு வதற்கேற்ற உண்ணும்அறை-இத்தகைய வசதிகள் உள்ளது. இந்த விருந்தினர் இல்லம் கட்டுவித்ததுடன், ஒவ்வொரு சிறு விவரங்களிலும் தம் கவனத்தைக் கொண்டு செலுத் தியதுதான் பலருடைய பாராட்டுக்கு உரியவரானார். (4) ஆய்வுக் கூடங்கள் : பொறியியல் படிப்பு ஏட்டுச் சுரைக்காய் அன்று. மாணவர்கள் எண்ணிக்கை பெருகிய தாலும், புதிய துறைகளை ஏற்படுத்தியதாலும் ஆய்வுக் கூடங்கள் தேவைப்பட்டன. இவற்றின் இன்றியமை, யாமையை உணர்ந்த துணைவேந்தர் வெகு விரைவில் இரண்டு மூன்று ஆய்வுக் கூடங்களை எழுப்பித் தேவை: யான வசதிகள் கிடைக்கச் செய்தார். (8) ஆசிரியர்கள் குடியிருப்பிற்கான பல்வேறு நிலை ஆசிரியர்களுக்கேற்ற வீடுகள் அடங்கிய பிரகாசம் நகர் இவர் காலத்தில்தான் தோன்றியது. அஃது இன்று விரிவாகிக் கொண்டே வருகின்றது. பத்தாண்டுகள் இப்பல்கலைக் கழகத்தில் அநுபவம் பெற்றுள்ள ஆசிரியர்க் கென்று விதிகளை வகுத்துக் கொண்டு இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப் பெற்றன. இந்த விதியின்கீழ் 10 ஆண்டுகள் அல்லலுற்ற அடியேனுக்கு ஒர் இல்லம் ஒதுக்கப்பெற்று அதில் ஏழாண்டுகள் தங்கியிருக்கும் பேறு பெற்றேன். வழக்கமாகச் செய்யும் வேலைகளை விட இரு மடங்கு செய்ய முடிந்தது. துறையிலும் இல்லத்திலும் ஆய்வு மாணவர்க்கான பணிஇமும்முரமாக நடைபெற இந்த வசதிகள் துணை செய்தன. (8) பொறியியல் கல்லூரி-இரண்டாவது உணவு விடுதி : பொறியியல் கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனதால் இன்னொரு விடுதி தேவைப்பட்டது. விரைந்து செயலாற்றி அதைத் தோற்று வித்தார். மருத்துவக் கல்லூரி, பொறியியற் கல்லூரி