பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய துணைவேந்தர் டாக்டர் D. சகந்நாதரெட்டி 375 மாணவர்களின் வகுப்பு முற்பகல் எட்டு மணிக்கே தொடங்குவதால், விடுதி இவர்கட்கு மிகவும் இன்றியமை யாதது என்பதை அவர்கள் பணியை நேரில் அறிந்தவர்கள் தாம் அவர்களின் தேவையை உணர முடியும். இங்ங்ணம் டாக்டர் சகந்நாத ரெட்டியின் காலத்தில் பன்முக விரிவு வசதிகளைப் பெற்ற பல்கலைக் கழகம் அரசியல் வாதிகளின் தலையீட்டினால் சீரழிந்து வரு கின்றது. இவற்றையெல்லாம் நோக்கிக் கொண்டு கண்மூடி மெளனியாக இருக்கும் ஏழுமலையான்தான் அரசியல்வாதி களின் குறுக்கீடு பல்கலைக் கழகத்தில் இல்லாமல் செய்தல் வேண்டும். அவன் திருவுள்ளத்தில் இருப்பதை நம் போலியர் அறியக் கூடுமா, என்ன? இந்த வளர்ச்சிகளை யெல்லாம் நேரில் கண்டவனாதலால் அடியேனின் நினைவுக் குமிழிகளில் இவை இடம் பெறுகின்றன. முதல் துணைவேந்தர் கட்டடங்களை நிர்மாணம் செய்வதில் விசுவகர்மா’ என்று கூறினால், மூன்றாவது துணைவேந்தரை மயன் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் பல்கலைக் கழக வளர்ச்சியையே தம் மூச்சாவும் பேச்சாகவும் கொண்டு பணியாற்றினர் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.