பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-2 06 50. இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் PUC தேர்வு முடிவுகள் வெளிப்படுவதற்கு முன்பே மருத்துவக் கல்லூரி சேர்வது பற்றிய விளம்பரம். வந்தது. மருத்துவத்துறை இயக்குநருக்கு எழுதி விண்ணப்ப பாரம், விவரங்கள் தருவித்தேன். முதலில் சேர்வதற்குத் தகுதி உள்ளதா என்பதைச் சோதித்ததில் உறைவிடம்’ என்ற தலைப்பின்கீழ் உள்ள குறிப்பு இது : ' பத்து ஆண்டுகள் பையன் ஆந்திர மாநிலத்தில் தங்கிப் படித் திருக்க வேண்டும்-அல்லது-பையனின் பெற்றோர் இந்த மாநிலத்தில் அலுவல் பார்த்திருக்க வேண்டும்' என்பது . அடுத்தது : "பையன் PUCயில் 50% விழுக்காடுக்குக் குறை யாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்' என்பது. பையன் நான்கு ஆண்டுகள்தான் திருப்பதியில் படித்தான். நான் 1.8.60 முதல் 31.7.70 வரை திருப்பதியில் வேலை பார்த்திருந்தேன்: தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக் கின்றேன். இவற்றால் பையன் சேர்வதற்குத் தகுதி வந்து விடுகிறது. பொதுவாக முன்னைய ஆண்டுகளில் விண்ணப்பங்கள் பெறும் இறுதிநாள் ஜூலை 15 என்றுதான் இருந்தது. இந்த ஆண்டு அரசு நுழைவுத் தேர்வுக்கு ஏற்பாடு செய்திருந்ததால் விண்ணப்பம் பெறும் இறுதிநாள் 15. 8.70 என்றிருந்தது. அரசுத் தேர்வுக்கு ஏற்பாடு செய்யாமல் 15.7.70 என்று இறுதிநாள் குறிக்கப் பெற்றிருந்தால் பையனுக்கு மருத்துவக் கல்லூரியில் அந்த