பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் 377 ஆண்டு சேர்வதற்கு தகுதி இல்லாமல் போயிருக்கும். ஏழுமலையான் கருணை இல்லாதிருந்தால் இந்த நிலை உருவாகி இருக்க முடியாது என்பதை நினைந்து நினைந்து அவன் திருவருளைச் சிந்திக்கின்றேன். இருப்பிடம் பற்றிய சான்றிதழை வட்ட ஆட்சியாளர் தருவதற்குத் தகுதி யில்லை என்றும், மாவட்ட ஆட்சியாளர் அல்லது துணை so, guitari (Collector or Sub-Collector) &mdār alpää வேண்டும் என்றும் விதி இருந்தது. அப்போது துணை ஆட்கியாளர் அலுவலகம் திருப்பதி-சந்திரகிரி சாலையி லிருந்து சந்திரகிரிக்கு இப்பக்கமேபிரிந்து மதன பள்ளிக்குச் செல்லும் சாலையில் மூன்று கல் தொலைவில் இருந்தது பல்கலைக் கழகக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் K. A. நீலகண்டத்திடமிருந்து நான் 10 ஆண்டுகள் அலுவல் பார்த்ததமைக்கு ஒரு சான்றிதழ் வாங்கி என் பையனிடம் தந்து, இருப்பிடம் பற்றிய சான்றிதழ் வழங்குமாறு பையனின் விண்ணப்பத்துடன் துணை ஆட்சி யாளரிடம் அனுப்பினேன். அந்த நாள் இரண்டாம் சனிக்கிழமையாக அமைந்து விட்டது. பையன் பேருந்தில் சென்று பிரிவு சாலையில் இறங்கி 2 கல் தொலைவு நடந்து துணை ஆட்சியாளர் அலுவலகம் அடைந்தான். நல்ல வேளையாகத் தலைமை எழுத்தர் அலுவலகத்தில் இருந் தார். துணை ஆட்சியாளர் IAS; இளைஞர். IAS தேர்வில் வெற்றி பெற்று முதன் முதலாக இந்த ஊருக்கு அனுப்பப் பெற்றிருந்தவர். பெயர் சத்தியநாராயணன் என்பது, முதலில் பையன் தலைமை எழுத்தரைப் பார்த்து விண்ணப்பத்தை இணைப்புடன் தந்தான். தலைமை எழுத்தர் இன்று விடுமுறை : நாளை மறுநாள் திங்களன்று வருக' என்று சொல்வி விட்டார். துணை ஆட்சியாளர் இருக்கின்றாரா?' என்று பையன் வினவ, இருக்கின்றார்; அடுத்த அறையில் உள்ளார். சென்று பார்க்கலாம்' என்று கூற, பையனும் அங்ங்ணமே சென்று அவரைப் பார்த்துக் கேட்டான் சான்றிதழ் வழங்குமாறு.