பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 78 நினைவுக் குமிழிகள்-தி. சுறுசுறுப்புள்ள ஆட்சியாளர் பையனிடம் தலைமை எழுத்தரை நான் அழைப்பதாகத் தகவல் தருக" என்று: சொல்ல, பையனும் அவ்வாறே செய்ய, தலைமை எழுத்தர் துணை ஆட்சியாளரைப் பார்த்தார். மிஸ்டர் ஹெட்கிளார்க், நீங்கள் இருக்கிறீர்கள்: நானும் இருக். கின்றேன். விடுமுறை என்று பாராது சான்றிதழ் வழங்குக: பையன் சுட்டிப் பயலாகக் காணப்படுகின்றான். இவன்ை அலைக்கழிப்பதால் நமக்குப் பயன் இல்லை. பையனுக்கும். பெரும் பயன்’ என்று சொல்ல, தலைமை எழுத்தரும். சான்றிதழ் தயாரித்து துணை ஆட்சியாளரிடம் கையெழுத்து வாங்கினார்; தலைமை எழுத்தரும் துணை ஆட்சியாளர் முத்திரை இட்டு சான்றிதழைப் பையனிடம் தந்தார். இருவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு பையன் பகல் 12 மணிக்குள் வீடு திரும்பினான். அனுப்ப வேண்டிய காலத்திற்குள் விண்ணப்பம் அனுப்பப் பெற்றது (எல்லா இணைப்புகளுடன்); விண்ணப்பமும் சேர வேண்டிய தேதிக்குள் சேர்ந்து விட்டது. ஒரு வாரத்தில் தேர்வு நாள் குறிப்பிட்டு . பாடத்திட்டத்துடன் மருத்துவ - இயக்குநரிடமிருந்து: கடிதமும் வந்துவிட்டது. இந்த ஆண்டு மாணவாகள் சேர்வதில் தாமதம் ஏற்படும் என்றும், இடம் கிடைப்பதில் ஏதாவது தடை ஏற்பட்டால் பையனின் ஓராண்டுக் காலம் வீணாகும் என்று கருதி பையனைக் கலைக் கல்லூரியில் யில் பி.எஸ்.சி. வகுப்பில் விலங்கியல் பிரிவில் சேர்த்து விட்டேன். ஒழுங்காகக் கல்லூரிக்குப் போய் வந்து கொண் டிருந்தான். பாடங்களையும் கருத்துடன் பயின்று வந்தான். அரசுத் தேர்வின் மாதிரி வினாத்தாளும் வந்தது. வினாக்கள் புறவய வகையாக (Objective type) அமைந்திருந்தன. இதற்காகப் பல இடங்களில் தனிப் பயிற்சிக்கல்லூரிகள் தோன்றி கொள்ளை இலாபம் அடிக்கத் தொடங்கி விட்டன, முதன் முதலாக குண்டூரில்