பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நினைவுக் குமிழிகள்-4 கூட்டி, பிற்போக்கு மாணவர்கள், அரிசன மாணவர் கள், இவர்கட்கு ஒதுக்கீடு செய்யப் பெற்ற இடங்களை நீக்கி, கூட்டி வந்த மதிப்பெண் தொகை கட்கு நிலை (Rank) தயாரித்து முதல் இடம் உள்ள வரை நிரப்ப லாம்' என்று முடிவு சொல்லியது. இதனால் நவம்பர் வரை மாணவர்கள் சேர முடியவில்லை. நடுவர் குழுவின் நீதி சரி இல்லை என்று அரசு கருதி தில்லி உச்சநீதி மன்றத்தில் மேல் வழக்கு தொடர்ந்தது, அந்த மன்றம் ஒரு திங்களில் வழக்கு விசாரிப்பதற்கு முன்னர் சொன்ன தீர்ப்பு இது; பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் , அரசுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் இவற்றைத் தனித் தனியாக வரிசைப்படுத்தி நிலையைக் (Rank) கணக்கிட்டு இரண்டு வரிசைகளிலும் ஒரே நிலை பெற்றவர்க்கு 1 முதல் 405 வரை (80%விழுக்காடு இடங்கள் - 550 இடங்கள் இருந்தன) நிரப்ப வேண்டியது. மீதி 145 இடங்களை வழக்கின் தீர்ப்பு சொன்னபடி செய்யவேண்டியது' என்று ஆணை பிறப்பித்தது. 405 இடங்கள் பெற்றவர்களின் பதிவு எண்கள் செய்தித் தாள்களில் வெளி வந்தன. இராமகிருஷ்ணனின் பதிவு எண் அவற்றுள் காணப் பெறவில்லை. இஃது எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை நல்கியது. திருப்பதி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் W. இராமச்சந்திரராவ் தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்: அவரிடம் விண்ணப்பித்து அரசுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வாங்கினோம். அவர் தந்தபடி இயற்பியவில் 89%உயிரியலில் 80% என்று இருந்தது. உயிர்யலில் 30%பெற்றதாகத் தந்தது தவறு என்பதை உறுதி செய்து கொண்டு பையனையும் கூட்டிக் கொண்டு ஐதரபாத் சென்றேன். ரிட்மனுக்களைச் சிறந்த முறையில் தந்து வெற்றி காண்பவர் திரு P. பாபுலு ரெட்டி என்ற வழக்குரைஞர் என்பதாக அறிந்து அவரைக் கொண்டு வழக்கு தொடுப்பதாக முடிவு செய்தேன்.