பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் மருத் துவக் கல்லூரியில் சேர்வதில் 381 ஒரு சனியன்று காலை 9 மணிக்கு ஐதரபாத் சென்று அடைந்தோம். நாம்பள்ளி இருப்பூர்தி நிலையத்திற்குச் சிறிது தூரத்தில் இருந்த மைசூர் உணவு விடுதியில் ஒர் அறை வாங்கிக் கொண்டு அதில் தங்கினோம். (இதில் தான் பின்னர் தோன்றிய ஐதரபாத் மத்திய பல்கலைக்கழகம் முதலில் தொடங்கப் பெற்றது). பழைய கட்டடங்கள் இடிக்கப் பெற்றுப் புதிய கட்டடம் இந்திரப்பிரஸ்தம்போல் காட்சி அளித்தது; இந்தக் காட்சியை 1977 செப்டம்பரில் கண்டேன்), நீராடல் முதலிய பணிகளை முடித்துக் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் சென்றோம். டாக்டர் ரமேஷ் பாய் என்பவர் (கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்; தமிழ், தெலுங்கு கன்னடம் நன்கு பேகபவர்) இயக்குநர். ஆனால் தேர்வுப்பொறுப்பு துணை இயக்குநர் கையில் இருந்தது. அவர் ஊரில் இல்லை. டாக்டர் பாய் அவர்களைச் சந்தித்து பையன் எழுதிய விடைத் தாள்களையும் அவன் பெற்றுள்ள மதிப்பெண் களையும் அவை சரியாக மதிப்பெண் பட்டியில் (Master Roll) பதியப் பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று வேண்டினேன். அவர் பேச்சில் சதுரர். 'காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது பழமொழியை அறிவீர்கள். நீங்கள் உங்கள் பையனைப் பெரிதாக நினைத்துக்கேட் கின்றீர்கள். இப்படியே எல்லோரும் கேட்டால் எப்படிக் காட்டமுடியும்?' என்றார். மாணவர்கட்காகத்தான் அரசு. மாணவர்கள் இல்லாவிட்டால் கல்லூரி இல்லை; மருத்துவ மனைகள் இல்லை. அதிகம் பேசுவானேன்? உங்கள் துறையும் இல்லை; அவர்கள் கேட்டால் தரவேண்டியது உங்கள் கடமை. பையனுக்கு நான் தகப்பன்; ஆசிரியனும் கூட, நான் சொல்லிக் கொடுத்து இத்தேர்வை எழுதினவன். இயற்பியல்-வேதியியலில் 89% வாங்கியுள்ளான்; உயிரியலில் 73%வந்திருக்க வேண்டும்.