பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.2 நினைவுக் குமிழிகள்-4 30%தான் போடப் பெற்றுள்ளது. இதில் எங்கோ தவறு நடந்துள்ளது. நீங்கள் பல்கலைக் கழகத்தை ஐயுற்றுத் தேர்வு நடத்தினர்கள். இப்போது பொதுமக்கள் அரசை ஐயுறுகின்றார்கள். அங்கும் மனிதர்கள்: , இங்கும் மனிதர் கள். மனிதர்கள் தவறு செய்கின்றவர்கள்.' என்றேன் நன்றாகப் பேசுகின்றீர்கள். துணை இயக்குநர் பொறுப்பில் தேர்வுகள் நடைபெற்றன. அவர் விடுப்பில் உள்ளார். ஆகவே காட்டுவதற்கில்லை. அவர் இருந்தாலும் இதையே தான் சொல்லுவார்' என்றார். நீங்கள் தேர்வு வைத்த தால் வழக்குகள் ஏற்பட்டு ஆறு மாதம் தள்ளிப்போய் விட்டது மாணவர்களைச் சேர்ப்பதில், தாளுக்கு ரூ. 200/வீதம் கட்டச் சொல்லி 10 அலுவலர்களை நியமித்து மதிப் பெண்கள் விடையேடுகள் இவற்றைப் பார்க்க ஏற்பாடு செய்யலாம். மதிப்பெண் சரியாக இல்லாவிட்டால் பணம் போய்விடும். அது சரியாக இருந்தால் பணம் வாப்ஸ் என்ற திட்டம் இருக்கலாம். எல்லோரும் வந்து கேட்பார்கள் என்றீர்கள். அது வெறும் கற்பனை’’ என்றேன். 'மேலும் இஃது என்ன மாமியார்-மருமகள், கதைபோலிருக்கிறது?" என்றேன். இயக்குநர் நல்ல மன நிலையில் வேலை நெருக் கடியின்றி உட்கார்ந்திருந்தார். அந்தக் கதை என்ன?” என்றார், புதிதாக மருமகள் ஒருத்தி, தாராள மனப்பான்மை இல்லாதவள். பிச்சைக்காரன், ஒருவன் வந்து பிச்சைக்கேட்டான். 'ஒன்றும் இல்லை போ போ' என்று சொல்லி விரட்டி விட்டாள். தோட்டத்திலிருந்த மருமகள், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மாமியார் இதைப் பார்த்தாள். அவள் ஏ பிச்சைக்காரா? இங்கு வா" என்று அழைத்தாள். பிச்சைக்காரனும் ஏதோ கிடைக்கும் என்று ஆவலாக வந்தான். மாமியார் 'நேற்று வந்தவ ஞக்கு இல்லை என்று சொல்வதற்கு என்ன அதிகாரம்? இப்போது நான் இல்லை’ என்று சொல்கிறேன்; போ' என்றாள் என்பது கதை' என்றேன். இயக்குநர் சிரித்தே விட்டார். மதிப்பெண்கள், மாணவர் விடையேடுகள் இவற்றைச் சோதிக்காமல் விடப்போவதில்லை. வேறு