பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதில் 383 முறையில் முயல்வேன். இதுகாறும் அன்பாகப் பேசி 'இல்லை என்று சொன்னதற்கு நன்றி' என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டேன். - நேராக பர்கத்புரா (ஐதரபாத்தில் ஒரு பகுதி) வந்து திரு. P. பாபுலு ரெட்டியைப் (வழக்குரைஞர்) பார்த்து விவரம் தெரிவித்து ரிட் விண்ணம் போடவேண்டும் என்றேன். அவரும் ஒப்புக் கொண்டு மறுநாள் (ஞாயிறு) காலை 8 மணிக்கு வருமாறு பணித்தார்.இரவு 8 மணிக்கு அறைக்குத் திரும்பினோம். சிற்றுண்டி உண்டு ஒய்வு கொண்டோம். மறுநாள் காலை நீராட்டம் சிற்றுண்டி இவற்றை முடித்துக் கொண்டு பர்கத்புரா வந்து வழக்குரைஞர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம். வழக்கு ரைஞர் இந்து நாளேட்டைப் படித்துக் கொண்டிருந்தார். 8 மணியிலிருந்து 10 மணிவரை வேத பாராயணம் பண்ணு வதுபோல் செய்தித் தாளில் ஆழ்ந்து கிடந்தார். இது தான் பற்றற்ற நிலையில் ஒய்வு கொள்ளுவது போலும்!” என்று நினைத்துக்கொண்டேன். 9 மணிக்குச் சேட் ஒருவர் வந்தார். ஒரு பழைய அழுக்கேறியிருந்த ஒரு கித்தான் பையைத் தந்து "இதில் 10 ஆயிரம் உள்ளது' என்று சொன்னார் . அதில் 100, 50, 10, 5 ரூபாய், நோட்டுகள் கற்றைக் கற்றையாய்க் கிடந்தன. அவற்றை எண்ணாமல் பெரிய மேசையின் கீழ் உள்ள பெரிய உள்அறையில் ஒன்றில் அப்படியே கொட்டிக் கொண்டு பையைத் திருப்பித் தந்தார். அப்போது வழக்குரைஞர் ஏதோ வேலையாக வீட்டுக்குள் சென்றார். அப்போது என்னவழக்கு?’ என்று சேட்டைக்கேட்டேன். அவர் "ஓர் இடவிஷயமான தகராறு. ரிட்போடுவதற்கு ஃபீஸ் இது' என்று சொல்லிய துடன் நில்லாது, எங்கள் போன்ற வியாபாரிகட்கு ஒரு ரிட் மனுவுக்கு 10 ஆயிரம் ஃபீஸ்: உத்தியோகஸ்தர் கட்கு இரண்டாயிரம்; மாணவர்கட்கு ஆயிரம். ஆனால், ஃபீஸ் அதிகமானாலும் வழக்கு வெற்றியாகும். வக்கீல் கோடீஸ்வரன் . இந்த வீட்டையே இரண்டு இலட்சத்திற்கு வாங்கி விட்டார்: இப்போது 20 இலட்சம் பெறும். ஏராளமான பெரிய பெரிய