பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.84 நினைவுக் குமிழிகள்-4 காலியிடங்களை மலிவாக முஸ்லீம்களிடம்வாங்கிச் சிறுசிறு பகுதிகளாக மனைகளாகப் பிரித்து கிராக்கியாகவிற்றுக் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார், வக்கீல் தொழிலில் மாதம் ஐம்பதாயிரத்திற்குக் குறையாமல் வருமானம் வரும்' என்றார், நீங்கள் வந்த விஷயம்?’’ என்று கேட்க, நான் மருத்துவக் கல்லூரியில் சேரும் விஷயமாக ஒரு ரிட் போட' என்றேன். உங்கட்கு வெற்றி உறுதி' என்றார். சேட், இதற்குள் உள்ளே சென்றிருந்த வழக்குரைஞர் வந்துவிட்டதால் எங்கள் உரையாடலை நிறுத்திக் கொண்டோம். எங்கள் விஷயத்தைக் கவனிக்க வேண்டும்’ என்றேன். "பேராசிரியர் அவர்களே, உங்கட்கு இதுபெரியது. எனக்கு இது என்மேல் உட்காரும் கொசுவைத்தட்டி விடுகிற, மாதிரி, உதவி வக்கீல்கள் 10 மணிக்கு வருவார்கள், ஒரு மணி நேரத்தில் முடித்து அனுப்பிவிடுகின்றேன் என்றார், மணி 10 அடித்தது. ஒரு வக்கீல் வந்தார். விண்ணப்பம் தயாராயிற்று. 9, 10 வகுப்பிலும், மெட்ரிக், P.U.C யில் வாங்கின மதிப் பெண்களையும் 4 படிகள் தயாரித்து வைத்திருந்தேன். அவற்றில் இரண்டு படிகளைத் தந்தேன். ஒருபடியை விண்ணப்பத்துடன் இணைப்பாகச் சேர்த்துக் கொள்ளுமாறு உதவிவக்கீலிடம்சொன்னார். விண்ணப்பத். தின்வேண்டுகோளில் (1) இந்த விண்ணப்பத்தின் முடிவு தெரியும் வரையில் திருப்பதி மருத்துவக் கல்லூரியில் ஒர் இடம் நிரப்பப் பெறாமல் வைத்திருக்க வேண்டும். (2) பையன் எழுதிய விடை ஏடுகள் மூல மதிப்பெண் பதிவேடு, வினாத் தாள்களின் விடை (Key) நீதிமன்றத்திற்கு அரசு கொண்டு வரவேண்டும் என்று சேர்க்குமாறு கேட்டுக் கொண்டேன். அங்ங்ணமே இவை சேர்க்கப் பெற்றன. ரூ250 செலவுக்கு வேண்டும் என்றார். தந்தேன். ஃபீஸ் 1000 என்றார். ரூ.750) தந்து மீதியை ஒரு வாரத்தில் தருவதாகச் சொன்னேன்; ஒப்புக் கொண்டார்.