பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்தல் 385 நான் ரிட்மனு தாக்கல் செய்தது கிறிஸ்துமஸ் விடுமுறை யில்; நீதிமன்றமும் விடுமுறை திங்களன்று தாக்கல் செய்யப் பெற்றது. செவ்வாயன்று (மறுநாள்)வழக்குவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பெற்றது. வழக்குரைஞர் 10 மணித் துளிகள்தாம் பேசினார்; வழக்கை மிக அற்புதமாக எடுத்துரைத்தார். உடனே நீதிபதி திருப்பதி மருத்துவக் கல்லூரியில் ஒர் இடத்தை நிரப்பாது வைத்திருக்க வேண்டும் என்று ஆணைபிறப்பித்தார். ஒருவாரத்திற்குள் அதில் மதிப்பெண் பதிவேடு, பையன் எழுதிய விடை ஏடுகள், வினாத்தாள்கள் (ஒருபடி), தேர்வாளர் தயாரித்த விடை (Key) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மருத்துவத் துறை இயக்குநருக்கு ஆணை போயிற்று. எங்கட்கு ஆணையின் முதற்படி தரப்பெற்றது. நான் பையனைக் கூட்டிக் கொண்டு அறை வந்து சேர்ந்தேன். அன்று ஒய்வு. மறுநாள் காலை சிற்றுண்டிக்குப்பின் கோல்கொண்டா கோட்டையைப் பார்க்கச் சென்றோம். பாமினி சுல்தான் கள் இங்குத் தங்கிக் கொண்டு விசயநகரப் பேரரசுடன் மோதிக் கொண்டான் என்பதைப் பையன் நினைவு கூர்ந்தான், இராமதாசு என்ற பக்தரின் பசனைக் கூட்டத்தைக் கண்டு இஃது ஒர் உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டிவிடக்கூடும் என்று அஞ்சி அவரைக் கோட்டைக்குள் சிறைவைத்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து கொண்டேஅவர் வைக்கப் பெற்றிருந்த சிறைச் சாலையைக் கண்டோம். அவருக்கு மேலிருந்து உணவு போடப் பெற்ற துவாரத்தை யும் பார்த்தோம். கோட்டையைச் சுற்றிப் பார்த்தபிறகு பகல் ஒரு மணிக்கு அறை வந்து சேர்ந்தோம். பிற்பகல் ஓய்வு கொள்ளாமல் உஸ்மானியா பல்கலைக் கழகம் சென்று சுற்றிப் பார்த்துத் திரும்பினோம்; அறைக்குப் பக்கத்திலுள்ள 'அபிட்ஸ் கடைத்தெருவைச் சுற்றினோம், திரும்பினோம். மறுநாள் காலை சிற்றுண்டிக்குப் பிறகு நேரு பூங்காவிற்குச் சென்று வந்தோம். இது எங்கட்கு நல்ல காட்சி விருந்து 12 மணிக்கு அறைக்கு வந்து உணவு நி-25