பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/420

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 நினைவுக் குமிழிகள்-4 கொண்டு, ஒய்வு கொள்ளாது அருங்காட்சியகம் (Museum) சென்று சுற்றிப் பார்த்தோம். இதுவும் எங்கள் கண்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. மாலை 5 மணிக்குக் காட்சியகம் மூடப்படும். வெளியில் வரும் வாசல் அருகில் 5 மணிக்கு ஒரு பொம்மை வந்து மணி யடிப்பதைக் கண்டு மகிழ்ந்தவண்ணம் சார்மினார் சென்று, அங்குள்ள கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்து விட்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் ஒய்வாக அறையில் தங்கியிருந்தோம். நாம். பள்ளி நிலையத்தில் அன்றைய பயணத்திற்குப் படுக்கை வசதிக்கு ஒதுக்கீடு செய்திருந்தோம். மாலையிலேயே இரவு உணவை முடித்துக் .ெ கா எண் டு திருப்பதி திரும்பினோம். திருப்பதி திரும்பிய ஒன்றிரண்டு நாட்களில் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுமாறு மருத்துவ இயக்குநரிட மிருநது கடிதம் வந்துவிட்டது. வழக்குரைஞரிடமிருந்தும் கடிதம் வந்தது. அதில் அசல் மதிப்பெண் பதிவேட்டில் இயற்பியல்-வேதியியலில் 89% உம், உயிரியலில் 73% உம், இருந்ததாகவும் ஆந்திர மாநிலத்தில் அரசுத் தேர்வில் முதலாவதாகத் தேறியுள்ளதாகவும் குறிப்பிடப்பெற்றி ருந்தது. செலவுத் தொகைக்கு அரசுமீது வழக்கு தொடுக்குமாறு வழக்குரைஞருக்கு எழுதினேன். அது வேண்டா எவ்வளவு செலவாகியிருந்தாலும் ரூ.250). தான் கிடைக்கும். அவ்வழியில் போக வேண்டா. என்க்குத் தர வேண்டிய ரூ 250 ஐத் தர வேண்டா' என்று பதில் எழுதினார் வழக்குரைஞர். டாக்டர் W. இராமச்சந்திரராவ் மருத்துவக் கல்லூரி யின் முதல்வர்: திருவேங்கடவன் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர். இவரை நான் நன்கு அறிவேன். ஆதலால் பையன் கல்லூரியில் சேர்ந்த அன்று நானும் கல்லூரி சென்று வந்தேன். மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேறியும் (அரசுத் தேர்வில்) உனக்கு இடம் கிடைக்காமற்.