பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமகிருஷ்ணன் மருத்துவக் கல்லூரியில் சேர்தல் 387 போனது மிகவும் வருந்தத் தக்க விஷயமாகும். ரிட் வழக்கு போட்டதால் உனக்குக் இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இன்னும் ஆறு திங்களில் ஒய்வு பெற்று எங்கோ இருப்பேன். நீ நன்றாகப் படித்து மாநிலத்தில் முதல் மாணவனாக வரவேண்டும் என ஆசி கூறுகின்றேன். நன்றாக படி. இதுதான் நின் தந்தைக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடன்' என்று கூறி விடை கொடுத்தார். அவர் ஆசி கூறியபடியே பையனும் மிக்க ஊக்கத்துடன் பயின்று ஐந்தாண்டுகளிலும் எல்லாத் தாள் களிலும் முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ந்தான்; இதனால் கல்லூரியிலும் முதல் மாணவன்; பல்கலைக் கழகத்திலும் முதல் மாணவன். இவன் மூன்றாவது ஆண்டு தேர்வு எழுதும்போது ஒருநாள் அதிகமாகக் கண்விழித்துப் படித்தான். அன்று தேர்வு நன்றாக எழுதி விட்டான். மாலையிலும் இரவிலும் நீராக வாந்தி எடுத்தான்; உடலின் வெப்பம் மிக அதிக மாகி கவலைக்கிடமாக்கியது. நன்றாக உறங்கும்படி செய்தேன். கண் விழித்துப் படிக்க வேண்டா என்று சொன்னேன். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்தான்: உடலுக்கு ஒன்றும் இல்லை. மேலோட்டமாக அன்றைய தேர்வுக்கு ஏதோ படித்தான். மிதி வண்டியில் தேர்வுக்கு அனுப்ப மனம் வரவில்லை. மிதிவண்டி ரிக்ஷாவில் ஆய்வு மாணவர் ஒரு வ ைர யு ம் சேர்த்துத் துணைக்கு அனுப்பினேன். இதன் பிறகு எழுத வேண்டிய தேர்வு கட்கும் ஆய்வு மாணவர் துணையுடனேயே சென்றுவர ஏற்பாடு செய்தேன். தெய்வாதீனமாக அந்த ஆண்டு எல்லாத் தேர்வுகளையும் நன்றாக எழுதித் தேர்ந்தான். மருத்துவக் கல்லூரியில் பயின்றபோது முதல் இரண்டு ஆண்டுகள் பையனைச் சிறிது கவனித்தேன். இந்தக் கவனம் கூட தேவை இல்லை. பையனே நன்றாகப் படித்துக் கொண்டதை அறிந்தேன். உடற்கூற்றியல்