பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 நினைவுக் குமிழிகள்-2 (Anatomay) தேர்வு மிகவும் கடினம் என்று சொல்வார் கள். பெரும்பாலோர் இதில் தோல்வியடைவது கண்கூடு. இதிலும் கூட முதல் மதிப்பெண் பெற்றுத் தேர்ந்து விட்டான். மருத்துவப் பாடங்கள் பயின்ற போது 'மருத்துவத்தில் ரேடியோ ஐஸோடோப்புகள்’’ (Appi cation of isotopes in. Medicine) grass p & Goaljosë கட்டுரையொன்று நான் எழுதி தந்திருந்தேன். அணுவைப் பற்றிப் பல்லாண்டுகள் காரைக்குடியில் பயின்றபோது பெற்ற அறிவின் பயன் இது. இந்த வினா நான் எதிர்பார்த்தது போலவே தேர்விலும் வந்தது. மிக நன்றாக எழுதி அந்தத் தாளிலும் முதல் மதிப்பெண் பெற்றதை இன்றும் நினைவுகூர்ந்து மகிழ்கின்றேன். திருப்பதியிலே ஒராண்டு House Surgeon பயிற்சியும் பெற்றான். 1977 அக்டோபரில் நான் ஒய்வு பெற. வேண்டிய நிலை ஏற்பட்டதால் M.D யைச் சென்னையில் பயில் ஏற்பாடு செய்வதில் முயன்றேன். அதை அடுத்த குமிழியில் வெளிப்படுத்துவேன். குமிழி-297 51. தமிழ்த்துறைப் பணியாளர் கியமனத் தொடக்கம் முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை, மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற அளப்பு:அரிய ஆர்.அமுதை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை விளக்கொளியை மரகதத்தை திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கி னாளே’. 1. திருநெருந்தாண்டகம்-14