பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறைப் பணியாளர் நியமனத் தொடக்கம் 3.89 என்ற திருமங்கையாழ்வார் பாசுரச் சிந்தனையுடன் இக் குமிழி வெளி வருகின்றது. இங்குத் தமிழ்த் துறை தொடங்கப் பெற வேண்டும் என்று (1969-61)இல் முகிழ்த்த என் எண்ணம் (1970-71)இல் பழமாயிற்று. 1969-அக்டோபரில் தமிழக மானியம் கிடைத்ததால், (1969-70)இல் தமிழ் எம்.ஏ, வகுப்பு தொடங்க முடியாத நிலை உண்டாகி விட்டது. எனவே, (1970-71) முதல் எம்.ஏ.வகுப்பு செயற்படத் தொடங்கியது. -ళీgl மானாக்கர்கள் ேச ர் ந் த ன ர். 1960-ஆகஸ்டில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்களால் போடப்பட்ட தமிழ் விதை முளைத் தாலும் விரைவாக வளர முடியாத நிலை - ஒரு பெரிய தேக்கம்-ஏற்பட்டு விட்டது. ஒரு பத்தாண்டுகள் இரண்டு இலைக்குமேல் விடவில்லை தமிழ்விதை, தமிழ்த் துறைக்குப் பேராசிரியர்-1, துணைப் பேராசிரியர்-1, விரிவுரையாளர்-1 தேவை என்று விளம்பரம் செய்யப் பெற்றது. பேராசிரியர் பதவிக்கு (1) பத்தாண்டுகள் எம்.ஏ. வகுப்பு பயிற்றியதன் அநுபவம், (2) டாக்டர் (Ph.D.) பட்டம் பெற்றிருக்க வேண்டும், (3) டாக்டர் பட்டம்பெறவிழையும் மாணாக்கர் கட்கு வழிகாட்டும் அநுபவம் வேண்டும் என்றும்; துணைப் பேராசிரியருக்கு (!) 5 ஆண்டுகள் எம்.ஏ. வகுப்பு பயிற்றிய அநுபவம், (2) டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அநுபவம், (3) டாக்டர் பட்டம் பெறுவோருக்கு வழிகாட்டிய அதுபவம் வேண்டும், (இருக்கலாம், இல்லாமலுமிருக்கலாம்) என்றும்; பேராசிரியர், துணைப் பேராசிரியர், விரிவுரையாளர் இப்பதவிக்கு எம்.ஏ., முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் தேறியிருக்க வேண்டும் என்றும் தகுதிகள் விளம்பரத்தில் குறிப்பிடப் பெற்றிருந்தன. இந்த விளம்பரத்திற்கு மூன்றே விண்ணப்பங்கள் வந்திருந்தன. இவற்றைப்பற்றிப் பின்னர் விளக்குவேன்.