பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 90 நினைவுக் குமிழிகள்-4 துணைவேந்தர் டாக்டர் டி. சகந்நாத ரெட்டி இருப்பூர்தி வண்டி தண்டவாளத்தில் ஒடுவதுபோல் சட்டத்தின்படி நடப்பவராதலால் தமிழகத்திலுள்ள மூன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்கட்குக் கடிதம் எழுதி தக்கவர் ஒருவரைப் பேராசிரியர் பதவிக்குப் பரிந்துரைக்கு மாறு கேட்டிருந்தார். அந்தக் காலத்தில் (1970) நான் அறிந்தவரை டாக்டர்பட்டம்பெற்றவர்கள் நால்வரே இருந் தனர். ஒருவர் டாக்டர் மு. வரதராசன். இவர் பல்லாண்டு கள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் எம்; ஏ. மாணாக்கர் கட்குப் பயிற்றின அநுபவம் பெற்றிருந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியேற்ற பிறகு (1962 என்பதாக நினைவு) சிலருக்கு பிஎச். டி பட்டத்திற்கு வழி காட்டிய அநுபவமும் அவர் பெற்றிருந்தார். யாரோ ஒர் ஆராய்ச்சி மாணவர் (திரு நாகு என நினைக்கின்றேன்) டாக்டர் பட்டமும் பெற்றிருந்ததாக நினைவு. திரு மொ. அ. துரை அரங்கசாமிக்கும் டாக்டர் பட்டம் இருந்தது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரிய ராகப் பணியாற்றியபோது டாக்டர் பட்டத்திற்கு ஆய்ந்து பட்டம் பெற்றவர். இதற்குமுன் இவர் சில ஆண்டுகள் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அப்போது அக்கல்லூரியில் தமிழ் எம். ஏ. வகுப்பு நடைபெற்றதாகத் தெரியவில்லை. மதுரைப் பல்கலைக்கழகம் தோன் றிய பின்னர், அங்குப் பேராசிரியர் பதவி பெற்று ஒரு சில ஆண்டுகளே பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். மூன்றா மவர் டாக்டர் அ. சிதம்பர நாதன் செட்டியார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்லாண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றி எம். ஏ. மாணவர்கட்கு பயிற்றிய அநுபவம் பெற்றவர். சென்னைச் சட்டமன்ற மேலவைக்கு ஆசிரியர் தொகுதியில் உறுப்பினர் தேர்த லுக்கு நின்று வெற்றி பெற்றவர். இதனால் பல்கலைக் கழகத்தினருக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையினால் பேராசிரியர் பதவியைத் துறந்தவர்.