பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறைப் பணியாளர் நியமனத் தொடக்கம் 39 F. அந்தச் சமயத்தில் (1958-59 என்பதாக நினைவு) சென்னைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கப்பெற்ற ஆங்கில-தமிழ் அகராதிப் பணியில் தலைமைப் பதிப்பாசிரி யராகச் சேர்ந்து பல்லாண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் திட்டத்தை வெற்றிபெறச் செய்தவர். பின்னர் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். நான்காமவர் கோவை பூ சா. கோ கலைக் கல்லூரி யில் பணியாற்றிய T. B. ஞானமூர்த்தி என்பார். திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை பற்றிய விளம்பரம் வந்தபோது பேராசிரியர் பதவிக்குத் தகுதியாக இருந்தவர்கள் நால்வரில் டாக்டர் ஏ. சி. செட்டியார் திருநாடு அலங்கரித்து விட்டார். டாக்டர் மொ. அ. துரை அரங்கசாமி பணியிலிருந்து ஒய்வு பெற்று விட்டார். இவருக்குப் பத்தாண்டுகள் எம். ஏ. மாணவர் கட்குக் கற்பித்த அநுபவம் இருந்ததா என்பது ஐயமே. அங்ங்னமே பிஎச். டி. பட்ட மாணாக்கர்கட்கு வழிகாட்டிய அநுபவம் இருந்ததா என்பதும் ஐயமே. ஆனால் எல்லாத் தகுதிகளையும் பெற்றிருந்தவர் டாக்டர் மு. வரதராசன் ஒருவரே . அப்போது அவர் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். துணைவேந்தர் டாக்டர் ரெட்டி எழுதிய கடிதங்கட்கு மூன்று துணைவேந்தர்களிடமிருந்து வந்த மறுமொழி பற்றியும் குறிப்பிடுகிறேன். (1) முதலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துணைவேந்தர் டாக்டர் ஆதி நாராயணா தந்த மறுமொழி : இந்தப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் அ. சிதம்பர நாதனைத்தவிர பேராசிரியர்கள் ஒருவருக்குமே டாக்டர் பட்டம் இல்லை. டாக்டர் செட்டியார் அவர்களும் அண்மையில் மறைந்து விட்டார். இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மூலம் பிஎச்.டி பட்டம் பெற்றவர்கள் ஒருவருமே இலர். என்று எழுதி விட்டார். (2) சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தாமரைச் செல்வர் நெ. து. சுந்தரவடிவேலு