பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 நினைவுக் குமிழிகள்-4 அவர்கள் எழுதியது : "இப்பல்கலைக் கழகத்தில் எம். ஏ. வகுப்புகள் இல்லை; கற்பித்தலே இல்லை. தமிழ்த் துறை யில் டாக்டர் மு. வரதராசனே பிஎச்.டி. பட்டம் பெற்ற பேராசிரியர். அவர் மூலம் யாரோ ஒர் ஆராய்ச்சி மாணாக்கர் அண்மையில் பிஎச். டி. பட்டம் பெற்றதாக அறிகின்றேன். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் மட்டிலும்தான் எம். ஏ. வகுப்பு நடைபெற்று வருகின்றது. அங்கு வித்துவான் பட்டம் பெற்றவர்கள் கூட எம்.ஏ. கற்பிக்க அநுமதிக்கப் பெற்றுள்ளனர். ஆகவே, தாங்கள் கருதுகிறபடி ஆட்களே இல்லை. அங்குள்ள டாக்டர் சுப்பு ரெட்டியார் பிஎச். டி. பட்டம் பெற்றவர்; தரமான பன்னூல்களைப் படைத்தவர். அவரை வைத்துக்கொண்டு காலத்தை ஒட்ட வேண்டியதுதான்' என்று மறுமொழி தத்து விட்டார். (3) மதுரைப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் திரு. தெ பொ. மீனாட்சிசுந்தரனார் எழுதியது : 'டாக்டர் மொ. அ. துரைஅரங்கனார், டாக்டர் T. B. ஞானமூர்த்தி, அ. ச. ஞான சம்பந்தம், டாக்டர் ஆறுமுகனார் என்ற நானகு பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் தகுதியானவர்கள்' என்று எழுதி விட்டார். இத்துடன் இவர் நிற்கவில்லை. டாக்டர் T. E. ஞான மூர்த்தியையும் டாக்டர் ஆறுமுகனாரையும் விண்ணப் பிக்குமாறும் தூண்டிவிட்டார். ஏனைய இருவர்களிடம் என்ன சொன்னார்? அவர்கள் மறுமொழி தந்ததென்ன? என்பது அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம். திரு கு. தாமோதரனுக்குச் சொல்லி விண்ணப்பம் போட வைத் தார் என்று பின்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளால் ஊகிக்க முடிகின்றது. துணைவேந்தர் டாக்டர். டி. சகந்நாதரெட்டி விதி வரம்புகளிலேயே நிற்பவர். நேர்மையானவர்; மறைமுக மாகவோ வஞ்சகமாகவோ ஒன்றும் செய்யார். ஒருநாள் என்னை அவருடைய அறைக்கு வருமாறு சொல்லியனுப்பி யிருந்தார். திரு தெ. பொ. மீ. அவர்கள் எழுதிய கடிதத்தை என்முன் வைத்து அதில் குறிப்பிடப் பெற்றி