பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்துறைப் பணியாளர் நியமனத் தொடக்கம் 39.3 ருந்த நால்வர்களைப் பற்றியும் விவரங்கள் கேட்டார். நான் இவர்களைப் பற்றித் தெரிவித்தவை : (1) டாக்டர் மொ. அ. துரை அரங்கசாமி. இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். ஒராண்டு பச்சையப்பன் கல்லூரியில் கற்பித்த தாக நியேனவு; எம். ஏ. வகுப்புக்குக் கற்பித்திருத்தல் கூடும். மதுரைத் தியாகராயர் கல்லூரியில் ஒருசில ஆண்டுகள் பணியாற்றியவர். அப்போது அங்கு தமிழ் எம். ஏ. வகுப்பு தொடங்கப் பெற்றிருந்ததா என்பது நினைவில் இல்லை; தொடங்கப் பெறவில்லை என்பதுதான் நினைவு. சில ஆண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர் (துணைப் பேராசிரியாக); இங்கு எம். ஏ. வகுப்பு இல்லை. அப்போதுதான் அவர் பி. எச். டி. பட்டம் பெற்றார். பின்னர் மதுரைப் பல்கலைக் கழகம் தொடங்கப் பெற்றபோது அங்குச் சில ஆண்டுகள் பணியாற்றி ஒய்வு பெற்றவர். மதுரையில் சில ஆண்டுகள் எம். ஏ. கற்பித்திருக்கலாம். இவரிடம் ஆய்வு மாணாக்கர்கள் பதிவு செய்து கொண்டார்களா என்பது அறியக்கூட வில்லை. இவர்மூலம் ஒருவரும் பி. எச். டி. பட்டம் பெறவில்லை என்பது மட்டிலும் உறுதி. ஒய்வு பெற்ற வர்களும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரத்தில் குறிப்பிடப் பெறவில்லை. (2) டாக்டர் T. E. ஞானமூர்த் தி: இவர் கோவை பூ. சா. கோ. கலைக் கல்லூரியில் பணியாற்றுபவர். இவர் ஒய்வு பெறுவதற்கு ஆறு திங்கள் தான் உள்ளன. அக்கல்லூரியில் ஒராண்டு விட்டு ஓராண்டு தான் தமிழ் எம். ஏ. வகுப்புக்கு மாணாக்கர்களைச் சேர்க் கின்றனர். இவருக்கு எம். ஏ. கற்பித்த அநுபவம் ஆறு திங்களே.ஆய்வு மாணாக்கர்கட்கு வழிகாட்டிய அநுபவமே இல்லை. (3) அ. ச. ஞானசம்பந்தம் : இவர் பல்லாண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய வர். பத்து ஆண்டு கள் எம். ஏ. வகுப்பு கற்பித்தாரா என்று சொல்ல முடியாது. ஆசிரியப் பணியை துறந்து சில ஆண்டுகள் சென்னை அனைத்திந்திய வானொலியிலும், சில ஆண்டு