பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 நினைவுக் குமிழிகள்-சி கள் அரசு தமிழ் வெளியீடுகள் கழகத்தில் செயலாள ராகவும் பணியாற்றியவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஓராண்டாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்: இவருக்குப் பி எச். டி. பட்டமும் இல்லை; ஆய்வு மாணாக்கர்கட்கு வழிகாட்டிய அநுபவமும் இல்லை. இவ்வாறு கூறித் துணைவேந்தரிடம் விடைபெற்றேன். அவரும் எனக்கு நன்றி தெரிவித்தார். உள்ளத்தில் அழுக்கு இருந்திருந்தால் இக்கடிதங்களை எனக்குக் காட்டி யிருக்கமாட்டார் என்பது என் கருத்து. குமிழி-2 08 52. துணைப்பேராசிரியர் பதவிக்குப் பேட்டி மன்னிய வேங்கடக் குன்றினில் மேவும் மழைமுகிலே! நின்னருள் யாண்டும் ததும்பிக் கிடந்தும் நெறியறியேன்: பன்னருந் துன்பினிற் சாலவும் நொந்தேன்; படர்தடத்துத் துன்னிய மீனின் சிறுநா வறண்டு துவள்வுறுமே." மலையைக் குடைத்து எலியைப் பிடித்ததுபோலாயிற்று. எனக்குப் பேட்டிக்கு க் கார்டு கிடைப்பதற்கே வேங்கடம் மேவிய விளக்கின் ஒளி-கருணை வெள்ளம்-இராவிட்டால் இதுவும் நழுவிப் போயிருக்கும். விளம்பரத்தின்படி பேட்டி நடைபெறுவதாகக் நாள் குறிப்பிடப் பெற்றுக் கடிதங்கள் அனுப்பப் பெற்றனவாகத் தகவல் எட்டியது, நீலம் சஞ்சீவரெட்டிபவனத்தில் வாழும் ஒர் ஊர்க் குருவி என் مسدسجيميسسمسسسسسسسسسسسة 1. இராமராசன் எஸ். கே: அலங்காரம் (திரு. மலையப்பன் மீது பாடிய நூல்)