பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைப்பேராசிரியர் பதவிக்குப் பேட்டி 39.5 செவியில் மெல்ல ஊதியது. கோவை பூ. ச. கோ. கலைக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர். தா, இ, ஞான மூர்த்திக்கு மட்டிலும் பேட்டிக்குரிய கடிதம் அனுப்பப் பெற்றிருப்பதாகவும் மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் தெ. பொ, மீனாட்சிசுந்தரம், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசன் இவர்கள் இருவரும் வல்லுநர் குழுவாக அமைந்ததையும் அறிந்தேன். பேராசிரியர் பதவி வழங்கப் பெறும்போது மூன்று பேராசிரியர்கள் குழுவில் இருக்க வேண்டும் என்பது விதி. இருவர் மட்டிலும் குழுவில் இருக்கும் ஏற்பாடு இருந்ததால் துணைவேந்தர் டாக்டர் சகந்நாதரெட்டி பேராசிரியர் பதவியை ஒருவருக்கும் தரப் போவதில்லை என்பது வெள்ளிடை விலங்கலாகத் தென் பட்டது. - எனக்குப் பேட்டிக்குரிய கடிதம் வரவில்லை. மூன்று: நான்கு நாட்களே இருந்தன. உடனே துணைவேந்தருக்கு ஒரு கடிதம் வைத்தேன்; நேரில் பேச வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தேன். இசைவு தரப் பெற்றது; நான் துணைவேந்தரைப் பார்க்கும்போது இருவரிடையே யும் நடைபெறும் உரையாடலைப் பதிவு செய்து கொள்வதற்கெனத்துணைவேந்தரின் சொந்த உதவியாளர் (Personal Assistant) குறிப்பேடும் எழுதுகோலும் கையில் வைத்துக் கொண்டு தயாராக இருந்தார். அவர் இளைஞர்: பெயர் குருநாதன் என்பது. நான் : பேட்டிக்குக் கடிதம் எனக்கு அனுப்பப் பெறாத தன் காரணம் யாது? துணைவேந்தர் : உங்கட்கு எம். ஏ. கற்பித்த அநுபவம் இல்லாததால், உங்கட்குப் பேட்டிக்குவருவதற்குத் தகுதி இல்லை என்று அலுவலகத்தில் உங்கள் விண்ணப்பம் புறக் கணிக்கப்பெற்றது: அதனால் நீங்கள் பேட்டிக்குரிய கடிதம் பெறவில்லை.