பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக்கழகப் பணியேற்றல் § வதற்கென்று ஒரு பெரிய மண்டபத்திற்கு அடிக்கல்லும் நாட்டப் பெற்றிருந்தது. பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் இவர்கட்கென்று சுமார் ஐம்பது இல்லங்கள் நிறைவுற்றிருந்தன: இவற்றைத் தவிர பிரகாசம் நகர்' என்ற பெயரில் பல இல்லங்கள் கட்டத் திட்டமும் இருந்தது. இத்திட்டம் 1970-இல் தான் முடிந்தது. அப்போதுதான் எனக்கும் ஒர் நல்ல இல்லம் கிடைத்தது. இடநெருக்கடியில் எனக்கு இந்தித் துறையில் இருக்க ஒர் இடம்தரப் பெற்றது. அந்தத் துறையில் இருந்தபோது இந்தி-தமிழுக்கு ஒவ்வாமையாக இல்லை; தமிழும் இந்திக்கு ஒவ்வாமையாக இல்லை. ஒரு பெரிய மண்டபம்; மூன்றாவது மாடியில் சிமெண்ட் பலகையால் வேயப்பட்ட கூறை. பிப்பிரவரியிலிருந்து ஏப்பிரல் முடிய சரியான கோடை, தாங்க முடியாத வெப்பம். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். டாக்டர் வி.பி. சிங்க் துணைப் பேராசிரியர்- துறைத் தலைவர் (உ. த் தி ர ப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்). அடுத்த விரிவுரையாளர் திரு எஸ். டி. நரசிம்மாச்சாரியார், வைணவர் (ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்). டாக்டர் சந்திரபாது இராவுத், டாக்டர் ராம்பாபு சர்மா (உ.பி.யைச் சேர்த்தவர்கள்; திரு போரா என்பவர் (மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்). டாக்டர் சிரீதர் சிங்க் என்பவர் (பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்); இவர்கள் விரிவுரையாளர்கள். இவர்களைத் தவிர ஆந்திரம் உட்பட பல மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் ஆய்வு மாணவர்களாகச் சேர்ந் திருந்தனர். எல்லோருமே உதவிப் பணம் பெற்றவர்கள். ஆய்வு மாணவர்கள் எல்லோருமே என்னிடம் மரியாதை யாகவும் அன்புடனும் நடந்து கொண்டனர். இந்தித் துறை ஆசிரியர்கள் அனைவருமே சுவை மிக்க என் உரையாடலைப் போற்றுபவர்கள்; அனைவருமே என்னிடம் பெருமதிப்பு காட்டினர். இவர்கள் அனைவரை