பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 6 நினைவுக் குமிழிகள்-4 கான் : டாக்டர் ஞான மூர்த்திக்கு மட்டிலும் கடிதம் போயிருப்பதாக அறிகின்றேன். அவருக்கு ஆறுமாதம் தான் எம். ஏ. கற்பித்த அநுபவம் உண்டு; இன்னும் ஆறு திங்களில் ஒய்வு பெறப்போகின்றார். எந்த விதியின்கீழ் அவருக்குக் கடிதம் அனுப்பப் பெற்றது? து. வே : (பேச நா. எழவில்லை). நான் தேர்வு ஆணையத் தலைவர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விளம்பரப்படித் தகுதி இல்லை. அலுவலகத் தார் உங்கள் விண்ணப்பத்தைத் தனியாகப் பிரித்து வைத்து விட்டனர். அதனால் கடிதம் அனுப்பப் பெற வில்லை. தவிர, டாக்டர் ஞானமூர்த்திக்கு அனுப்பப் பெற்றதற்குக் காரணம் அவரை ஓர் ஒப்பந்தப்படி நியமிக்கலாமா? அவர் அதற்கு ஒப்புக் கொள்கிறாரா? என்பதை அறிவதற்காகத் தான். (தேராகப்பேசுவதற்கு வகை தெரியாது பேச்சை வேறு விதமாகத் திருப்புகின்றார்), கான், விளம்பரப்படித் தகுதியுள்ளவர்களைத்தான் நீங்கள் நியமிக்க வேண்டும். அப்படித் தகுதியுள்ளவர்கள் இப்போது (1970) எவரும் இல்லை. டாக்டர் ஞான மூர்த்தியை எந்த முறையிலும் ஒப்பந்தத்தில் நியமிப்பது அறமாகாது. இப்படித் தகுதியற்ற ஒருவரை வெளியி லிருந்து கொணரும் முயற்சி ஆண்டவனுக்கே அடுக்காது. பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஒருவரை (அதுவும் வெளியிலிருந்து கொணர்பவரைவிட அதிகமாகவே தகுதி பெற்றிருந்தும்)புறக்கணித்து விதி வரம்பிற்குப் புறம்பாகக் கொணர்வது அறமாகாது என்பதை நான் தங்கட்குக் கூறுவது மிகை. து. வே : குருநாதன் கூட இப்போது பதிவாளராக விரும்புகின்றார். நான் அவரை நியமிக்க முடியுமா?