பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைப்பேராசிரியர் பதவிக்குப் பேட்டி 3 & 7 நான் : தாங்கள் கூறும் ஒப்புமை சரி இல்லை. வயதுக் குறை என்ற ஒன்றைத் தவிர அவருக்கு ஏனைய தகுதிகள் இருந்தால் அவருக்குப் பதிவாளர் பதவி தரவேண்டியது தானே. உரைமுடிவு காணான் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப- நரைமுடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன்? என்ற கரிகாற் பெருவளத்தான் வரலாற்றை நீங்கள் அறிந்: திருப்பீர்கள். அந்தச் சோழன் நிலையில் இருப்பவர் இந்தக் குருநாதன். தவிர, இந்த மாதிரி நக்கல் பேச்சை நான் விரும்பவில்லை. என்னையும் குருநாதத்தையும் ஒப்புமைப் படுத்திப் பேசுவது ஒருவித கிண்டல், தயவு செய்து இவ்விதக் கிண்டலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்பது என் பணிவான வேண்டுகோள். தேர்வு ஆணையத் தலைவராகக் கருதிக் கொள்ளச் சொன்னிர்கள். அதற்கு இசைகின்றேன். அப்படியானால் தேர்வு ஆணைய அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவனாக என்னைத் தாங்கள் கருதிக் கொள்ளவேண்டும் என்பது என் வேண்டுகோள். என்னைவிடத் தகுதியுள்ளவர்கள் வெளியிலும் இல்லை என்பதைத் தாங்கள் நன்கு உணர்த் திருப்பீர்கள். நியமனக் குழுவிற்கு முன் என்னையும் பேட்டி காண வாய்ப்பு அளியுங்கள் என்பது என் பணிவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளையும் புறக்கணித்து குழுவைக் காண வகை செய்யாவிடில் ஆண்டவனிடம் தான் முறையிடவேண்டும். உங்களை நான் வந்து காண்பதைப் போல் ஆண்டவனை நான் சந்தித்துப் பேச முடியாது. அத்தகைய ஞானியின் பக்குவம் எனக்கு, 2. பழமொழி-6.