பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 & நினைவுக் குமிழிகள்-4 ஏற்படவில்லை. ஆனால், அந்த ஆண்டவன் நிலையில் இருந்து கொண்டு நீதியை நிலை நாட்டும் ஐதரபாத் உயர்நீதிமன்றத்தின் முன்தான் நான் முறையிடவேண்டும். அந்த இறுதி நிலைக்கு என்னைத் தள்ள மாட்டிர்கள் எனக் கருதுகின்றேன். அந்த நீதி மன்றத்திற்குப் போகுமாறு அரசு என்னைத் தள்ளியது-என் மகன் மருத்துவக் கல்லூரியில் சேரும் விஷயத்தில். நீதி கிடைத்தது; என் மகனும் மருத்துவக் கல்லூரி யில் இடம் பெற்றான். இப்படி உணர்ச்சி வயப்பட்டு நான் பேசியதும், துணைவேந்தர் தொலைபேசியின் மூலம் பதிவாளரைக் கூப்பிட்டு டாக்டர் ரெட்டியாருக்குப் பேட்டிக் கடிதம் கொடுங்கள்' என்றார். நான் துணைவேந்தரின் அறையை விட்டு வெளியேறுவதற்கு முன் பதிவாளர்த் திரு கே.எஸ்.எஸ். சுப்பராஜு கடிதத்துடன் துணைவேந்தர் அறைக்கே வந்து விட்டார். துணைவேந்தர் பார்வை யிலேயே கடிதத்தை என்னிடம் தந்துவிட்டார். அறப்போரில் ஆண்டவன் அருளால் ஒரு பாதி வெற்றி யாயிற்று. அடுத்த பாதி அறப்போரிலும் ஏழுமலையான் இருவருள் இருக்கும் என்றே நம்பித் துணைவேந்தரின் அறையை விட்டு மகிழ்வுடன் வெளியேறினேன். மூன்று நாட்கள் கழித்து பேட்டி நடைபெற்றது. மதுரையிலிருந்து துணைவேந்தர் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரமும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனும் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். இரு உறுப்பினர்கள் இருப்பதைக் கொண்டே பேராசிரியர் பதவி நிரப்பப் போவதில்லை என்ற பல்கலைக் கழகத்தின் கருத்து தெ. பொ. மீ.க்குப் புலப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அவர் விதிகளை மீறுவதையே மரபாகக் கொண்டவ ராயிற்றே. கோவையிலிருந்து டாக்டர் ஞானமூர்த்தியும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து கு.தாமோதர ணும் பேட்டிக்காக வந்திருந்தனர். முதலில் டாக்டர்