பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைப்பேராசிரியர் பதவிக்குப் பேட்டி 399 ஞானமூர்த்திக்குப் பேட்டி அளிக்கப் பெற்றது. அன்று அறையில் நடை பெற்றதுஅம்பலமாயிற்று. துணைவேந்தர் தெ.பொ.மீ. அவர்கள் எப்படியாவது டாக்டர் ஞானமூர்த்தியை ஒர் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில்பேராசிரியர் பதவியில் அமர்த்திவிடவேண்டும் என்று பரேதப் பிரயத்தனம் செய்ததாகவும், அதற்குத் துணைவேந்தர் டாக்டர் சகந்நாத ரெட்டி சிறிதும்இணங்கவில்லை என்றும் தெரிந்தது. ஆனால் துணைப் பேராசிரியர் சம்பளத் திட்டத்தில் (Reader's Scale) மேல் எல்லையாகிய ரூ 1250) தருவதாகவும், ஆனால் ஒப்பந்தம் இரண்டாண்டிற்கு மேல் தரமுடியாது என்றும் சொல்லி விட்டதாகவும் அறிந்தேன். பேட்டி முடிந்ததும் டாக்டர் ஞானமூர்த்தி என்னிடம் நேராக வந்து, ' நான் பணியை ஒப்புக்கொள்ளவில்லை; நீங்கள் நன்முறையில் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றுங்கள்' என்று வாழ்த்து கூறிக் கைகுலுக்கிச் சென்றார். 'வரவில்லை’ என்று கடிதம் வைத்து விடுங்கள் என்றேன். கோவை சென்று எழுதுவதாகச் சொல்லிச் சென்றார். திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பத்தாண்டுகள் பணியாற்றியதும், பன்னூல்களை எழுதிக் குவித்தவன் என்பதையும் தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறியும். நான் ஆறு ஆண்டுகள் குடும்பத்தைத் துறந்து திருப்பதியில் பிச்சைக்காரர்களில் ஒருவன்போல் சிரமப் பட்டதை ஒரு வரும் அறியார் தமிழக அரசு மானியம் பெறுவதற்கு ஒன்பதாண்டுகள் சென்னைக்குக் காவடி எடுத்ததையுரா அதில் நான் பெற்ற தொல்லைகளையும் ஒருவரும் அறியார்-டாக்டர் மு. வ. வைத்தவிர, தெ.பொ.மீ. அவர் கட்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் நான் டாக்டர் (பிஎச்.டி.,) பட்டம் பெறுவதற்குப் பல்லாண்டுகள் முயன்றதையும் பன்னூல்களை எழுதி வெளியிட்டதையும் நன்கு அறிவார் . என்னுடைய ’ கவிதை யநுபவம்' என்ற பெரிய தொரு நூலுக்கு