பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 நினைவுக்குமிழிகள்-4 அணிந்துரையும் வழங்கியுள்ளார். என்னுடைய திறமையை யும் உழைப்பையும் சுமார் இருபதாண்டுக் காலத்திற்கு மேல் நன்கு கவனித்து வந்தவர். . என்னைப்பற்றி இந்த அளவு எல்லா விவரங்களையும் என்னுடைய தகுதிகளையும் அறிந்திருந்த தெ.பொ.மீ.க்கு என்னைப் புறக்கணித்துத் துணைவேந்தர் டாக்டர் சகந்நாத ரெட்டி பேராசிரியர் பதவிக்குத் தகுதியான வர்களைத் தெரிவிக்குமாறு கடிதம் எழுதினபோது தெ. பொ. மீ. உள்ளத்தில் என்னைப்பற்றி ஏதாவது தவறான கருத்து தோன்றியிருக்க வேண்டும். டாக்டர் ரெட்டிக்கு என்னைப் பிடிக்கவில்லையோ என்ற கருத்தாவது தோன்றியிருக்க வேண்டும். இதைப் பயன் படுத்திக் கொண்டு தமக்கு வேண்டியவர்களைத் திருப்பதி யில் நுழைத்துவிடலாம் என்ற சிந்தனை இவர் மனத்தில் முகிழ்த்திருக்கவேண்டும். டாக்டர் சகந்நாத ரெட்டி தண்டவாளத்தில் இருப்பூர்தி ஓடுவது போல் விதியில் சிறிதும் வழுவாத வண்ணம் நடந்து கொள்பவர் என்பதைத் தெ. பொ. மீ. சிறிதேனும் சிந்தித்தாரிலர். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு டாக்டர் ரெட்டி யின் மனநிலையை நன்கு அறிந்து கொண்டிருந்தார். அப்பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் மு.வ.வும் டாக்டர் ரெட்டியின் மனப் போக்கைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். ஆகவே, முன்னவர் டாக்டர் ரெட்டி எழுதிய கடிதத்திற்கு எழுதிய மறுமொழி தரும் போது நீங்கள் நினைக்கின்றபடி ஆளே இல்லை” என்று எழுதிவிட்டார். அதற்கு மேல் எல்லாத் தகுதியும் பெற்றுச் சிறப்புடன் பணியாற்றும் டாக்டர் சுப்புரெட்டியாரையே பதவியில் உயர்த்தி ஆவன செய்து கொண்டால் துறையின் வளர்ச்சியும் பாங்குடன் அமையும் என்று குறிப்பிட்டும் எழுதிவிட்டார். டாக்டர் மு.வ. வல்லுநர் குழுவில் இடம்