பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைப்பேராசிரியர் பதவிக்குப் பேட்டி 40 # பெற்று வரும்போதும் திறந்த மனத்துடனேயே வந்தார். பேட்டியின்போதும் தோன்றும் கருத்தினைத் தெளிவாக உணர்த்திவிடுவதாக எண்ணியே வந்து சேர்ந்தார். தெ.பொ.மீ. மட்டிலும் துணைவேந்தர் டாக்டர் ரெட்டியைத் தவறாகப் புரிந்து கொண்டு தாம் நினைத்த இருவரை எப்படியாவது நுழைத்து விடவேண்டும் என்ற முடிவு எடுத்துக் கொண்டே வந்திருந்தார். என்னை எப்படியாவது வினாமாரியால் மடக்கி இப்பதவிக்கு அருகதையற்றவர் என்பதை நிலைநாட்டவே கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருந்தார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. என்னை நீண்ட நாட்களாக அறிந்திருந்தும் என் திறமையை நன்கு தெளிந்து தெரிந் திருந்தும் அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி என்னைப் புறக்கணிப்பதற்காகவே முடிவுசெய்து கொண்டு வந்திருந்தார் என்பதை அவர் மேற்கொண்ட செயல் களால் அறிந்து கொள்ள முடிந்தது. சில திங்கள்களில் ஓய்வு பெறப் போகும் டாக்டர் ஞானமூர்த்தியின்மீது பற்றும் பாசமும் வைத்திருந்தார். தெ. பொ. மீ. எப்படியாவது ஒப்பந்தத்தில் ஐந்தாண்டுகள் (அறுபத்தைந்து அகவை முடியும் வரை)அவரைப் பேராசிரி யராக நியமித்து விடுவது என்பது அவர் கொண்டிருந்த முடிவு கு. தாமோதரன் அண்ணாமலைப்பல்கலைக் கழகத் தில் தெ. பொ. மீ. பேராசிரியராகப் பணியாற்றியபோது அவர்கீழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மதுரைப் பல்கலைக் கழகத்தில் தெ. பொ. மீ. துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் தமிழ்த் துறைக்குத் துணை யாசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார் தாமோதரன். அப்போது இவர் தகுதியைப் போல் தகுதி பெற்றிருந்த தெ.பொ.மீ யின்மருகர்(மகளின் கணவர்)திரு . ஆர்.சண்முக மும் விண்ணப்பித்திருந்தார். அவரைத் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் வழியில் அதிக சம்பளத்தில் நியமித்து தி-26