பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 & நினைவுக் குமிழிகள்-4 விட்டார். இப்போது தாமோதரனை எப்படியாவது திரு வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் துணைப் பேராசிரிய ராக்கி விட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்தார். தெ. பொ. மீ. திருப்பதி வருவது தெரிந்து தாமோதரன் அவரைச் சந்தித்துப் பிரபத்தி செய்துவிட்டு வந்ததாக வும், அடுத்து டாக்டர் மு. வ. வையும் சந்தித்து அவரிடமும் இதே முறையைக் கையாண்டு வந்ததாகவும் பின்னர் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. தெ. பொ. மீ. டாக்டர் ஞானமூர்த்தியைப் பேராசிரியராக்குவதற்கு எங்கள் துணைவேந்தர் டாக்டர் ரெட்டி சிறிதும் இடம் கொடுக்கவில்லை. தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு வந்த தம் எண்ணம் பலிக்கவில்லை என்பதைச் சிறிதும் உணர்ந்தாரிலர். தாமோதரனைத் தாம் நினைத்தபடித் துணைப் பேராசிரியராக்கி விட்டார். இதில் டாக்டர் செகந்நாத ரெட்டியை எப்படியோ இணங்க வைத்து விட்டார். ஒரு துணைவேந்தர் மற்றொரு துணை வேந்தரின் விருப்பத்திற்கு விட்டுக் கொடுப்பது என்பது இயல்பேயாகுமன்றோ? எனவே, தாமோதரன் திரு. வேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில்(டாக்டர் பட்டம் இல்லாதிருந்தும்) துணைப் பேராசிரியராகி விட்டார். இதற்கு அவருடைய நல்லூழே காரணமாக அமைந்து விட்டது. எல்லாத் தகுதிகளிலிருந்தும் என்னைப் புறக்கணித்து விரிவுரையாளராகவே வைத்து விட வேண்டும் என்ற தெ. பொ. மீயின் உள்ளெண்ணத்தை டாக்டர் மு. வ. புரிந்து கொண்டு விட்டார். டாக்டர் ரெட்டியும் அறிந்து கொண்டு விட்டார். திருமலையின் மீது எழுந்தருளியிருக்கும் சீநிவாசனும் நன்கு அறிவான். தெ. பொ. மீயும் பின்னர் தம்முடைய தீய எண்ணத்தை உணர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர் டாக்டர் செளரிராசனிடம் பேசிய பேச்சாலும் ஒரு சில திங்கள் கழித்து என்னுடன் உரையாடியதிலிருந்தும் அறிந்து கொள்ள முடிந்தது. ஏன்? தெ. பொ. மீ. திய எண்ணமே உருக் கொண்ட கயவரல்லரே. இவ்வளவு