பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைப்பேராசிரியர் பதவிக்கு பேட்டி 金鲁3 நடை பெற்ற பிறகும் நான் தெ. பொ. மீயிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தேன்.அவருடைய அந்தரான்மா (Consciense) அவரைத் தொடந்து வருத்தியிருக்க வேண்டும். என்னுடைய உழைப்பையும் தூய்மையான எண்ணத்தையும் நன்கு அறிந்த ஏழுமலையான் எனக்கு உலகியலை நன்கு புகட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு நாடகம் நடை பெறச் செய்திருக்க வேண்டும் என்று என் மனம் எண்ணுகின்றது. 'திக்கற்றவருக்கு தெய்வம் தானே துணை?" குமிழி-209 53. முறையற்ற முறையில் நடைபெற்ற என் பேட்டி ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப, ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து என்மதியும் கடந்தண்ட மீது போகி, இருவிசும்பி னூடுபோய் எழுந்து மேலைத் தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி, அப்பால் மிக்கு மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கினேனே." என்ற திருமங்கை மன்னனின் பாசுரம் என் மனத்தில் எழுகின்றது. இக்குமிழியின் தொடக்கத்தில். எந்தநோக்கத் துடன் நல்ல பதவியைத் துறந்து, மூன்று மாத சம்பளத்தை 1. திருநெடுந் 5